மதுரை:
கீழடியில் எட்டாம் கட்ட அகழ்வாய்வில் செவ்வக வடிவிலான தந்தத்தினால் ஆன பகடைக்காய் கண்டுபிடிக்கப்பட்டிருப்பதாக தொல்லியல் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்துள்ளார்.

சிவகங்கை மாவட்டம் கீழடி, அகரம், மணலூர், கொந்தகை ஆகிய 4 இடங்களில் 8 ம் கட்ட அகழாய்வு பணிகளை கடந்த வாரம் முதல்வர் ஸ்டாலின் வீடியோ கான்பரன்சிங் முறையில் துவக்கி வைத்தார்.

முன்னதாக, கீழடியில் 8ம் கட்ட அகழாய்வு நடக்க உள்ள இடத்துக்கு பாதை வழங்க விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்தனர். தங்கள் விவசாயம் இதனால் பாதிக்கப்படுவதாக விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்நிலையில், விவசாயிகலை அதிகாரிகள் சமரசப்படுத்தி, இந்த 8ம் கட்ட அகழாய்வைத் தொடங்கினார்கள்.

கீழடியில் 8ம் கட்ட அகழாய்வு வரும் செப்டம்பர் மாதம் வரை நடைபெறவுள்ளது. இந்நிலையில், கீழடியில் புதிய பகடைக்காய் கிடைத்திருப்பதாக தொல்லியல் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, அவருடைய ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். அதில், ”மாண்புமிகு தமிழ் நாடு முதலமைச்சர் அவர்களால் அண்மையில் தொடங்கி வைக்கப்பட்ட கீழடி எட்டாம் கட்ட அகழ்வாய்வில் செவ்வக வடிவிலான (Rectangular), தந்தத்தினால் ஆன பகடைக்காய் கண்டுபிடிப்பு. இதுகாறும் கீழடியில் கனசதுர (Cubical) வடிவில் மட்டுமே பகடைக்காய்கள் கிடைத்து வந்தது குறிப்பிடத்தக்கது” என்று பதிவிட்டுள்ளார். இதுவரை நடந்த அகழ்வாராய்ச்சியில் பாசிமணிகள், தாயக்கட்டை, அணிகலன்கள், முதுமக்கள் தாழிகள் உட்பட பல ஆயிரம் தொல்பொருட்கள் கண்டறியப்பட்டுள்ளன. இந்நிலையில் தற்போது செவ்வக வடிவிலான தந்தத்தால் ஆன தாயக்கட்டை கிடைத்திருப்பது அபூர்வம் என தொல்லியல் அறிஞர்கள் தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து இந்த ஆராய்ச்சியை மேற்கொண்ட அமர்நாத் ராமகிருஷணன் அதிரடியாக மாற்றப்பட்டார். அதற்கடுத்தகட்ட ஆராய்ச்சிகள் பாதியிலேயே நுறுத்தப்பட்டது. பல்வேறு போராட்டங்களுக்குப் பிறகு தமிழக தொல்லியல் துறை கீழடியில் அகழ்வாராய்ச்சி மேற்கொண்டு வருகிறது. தற்போது 8ம் கட்ட அகழ்வாராய்ச்சி நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.