சென்னை: ஆபரேசன் சிந்தூர், பீகார் தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தம் உள்பட பல நிகழ்வுகள் குறித்து விவாதிக்க வலியுறுத்தி எதிர்க்கட்சிகள் நாடாளு மன்றத்தில்  தொடர் அமளியில் ஈடுபட்டு வருவதால், நாடாளுமன்ற இரு அவைகளும் இன்று 3வது நாளாக முடங்கி உள்ளன.

 பாராளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் பரபரப்பான அரசியல் சூழலில் ஜூலை 21 ஆம் தேதி தொடங்கியது. 21 அமர்வுகள் நடைபெறும் என அறிவிக்கப்பட்ட இந்த கூட்டத்தொடர் தொடங்கிய நாள் முதல், எந்தவொரு அலுவலும் நடைபெறாத வகையில், எதிர்க்கட்சிகளின் அமளியால் முடக்கப்பட்டு வருகின்றன.

இன்று மூன்றாவது நாளாக அவை தொடங்கிய நிலையில், தங்களது கோரிக்கைகள், தீர்மானங்கள் குறித்து விவாதிக்க வலியுறுத்தி மக்களவை மற்றும் மாநிலங்களைவில்,  எதிர்க்கட்சிகள் கடும் அமளியில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால், மக்களவை மற்றும் மாநிலங்களவை  நண்பகல் 12 மணி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.