ண்டன்

ங்கிலாந்தின் அடுத்த பிரதமருக்கான உட்கட்சி வாக்கெடுப்பில் போரிஸ் ஜான்சனுக்கு வெற்றி வாய்ப்பு அதிகரித்துள்ளது.

ஐரோப்பிய நாடுகள் கூட்டமைப்பில் இருந்து விலகுவதாக இங்கிலாந்து பிரதமர் தெரசா மே தீர்மானம் செய்தார்.  இதற்கு பிரக்சிட் என பெயராகும்.  அதற்கு அவருடைய அமைச்சரவையிலே கடும் எதிர்ப்பு கிளம்பியது.  ஆயினும் அதை அவர் கருத்தில் கொள்ளாமல் தனது முடிவில் அவர் தீவிரமாக இருந்தார்.

இந்த பிரக்சிட் விவகாரத்தில் இங்கிலாந்து பிரதம்ர் தேரசா மே உடன் முன்னாள் வெளியுறவுத் துறை அமைச்சர் போரிஸ் ஜான்சனுக்கு கருத்து வேறுபாடு ஏற்பட்டது.  அதை ஒட்டி போரிஸ் ஜான்சன் தனது பதவியை ராஜினாமா செய்தார்.    தெரசா மேவுக்கு எதிர்ப்பு அதிகரித்து வந்தது.

அதை ஒட்டி இது குறித்த வாக்கெடுப்புக்கு  தெரசா மே ஒப்புதல் அளித்தர்.  ஆனால் இந்த வாக்கெடுப்புகளில் தெரசா மே தொடர் தோல்வியை சந்தித்தார்.  அதனால் அவர் தனது பிரதமர் பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்தார்.   இதை ஒட்டி அவருடைய கன்சர்வேடிவ் கட்சியில் வாக்கெடுப்பு நடந்தது.

இந்த முதல் கட்ட வாக்கெடுப்பில் போரிஸ் ஜான்சனுக்கு 114 பேர் ஆதரவு அளித்துள்ளனர்   இவருக்கு அடுத்தபடியாக ஜெரெமி ஹண்ட் 43 வாக்குகளும், மைக்கேல் கோவ் 37 வாக்குகளும் பெற்றுள்ளனர்.   முதற்கட்ட வாக்குப்பதிவில் 20 மற்றும் அதற்க்கு குறைவான வாக்குகள் பெற்ற ஐவர் விலக்கப்பட்டனர்.

விலக்கப்பட்ட ஐவரில் ஒருவரான மேட் ஹென்காக் தனது ஆதரவை போரிஸ் ஜான்சனுக்கு தெரிவித்துள்ளார்.  இவருக்கு 20 உறுப்பினர் ஆதரவு உள்ளது. இதனால் போரிஸ் ஜான்சனுக்கு   வாய்ப்பு அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது.

இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு செவ்வாய் அன்று நடைபெற உள்ளது.   இந்த வாக்கெடுப்பில் 32 மற்றும் அதற்கு குறைவான வாக்குகள் பெற்றவரக்ள் போட்டியில் இருந்து விலக்கப்படுவார்கள்.    அனைத்து  வேட்பாளர்களும் 32க்கு மேல் பெற்றிருந்தால் குறைவான வாக்கு பெற்றவர்கள் போட்டியில் இருந்து விலக்கப்படுவார்கள்.