கடின பாறைகளை உடைக்கவும், துளையிடவும் ரிக் இயந்திரத்திற்கு பதிலாக போர்வெல் இயந்திரம் பயன்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
திருச்சி மணப்பாறை அருகே உள்ள நடுக்காட்டுப்பட்டியில் உள்ள ஆழ்துளை கிணற்றில் 2 வயது சிறுவன் சுர்ஜித் சிக்கியுள்ளான். அவனை மீட்பதற்கான பணிகள் கடந்த 4 நாட்களாக நடைபெற்று வருகிறது. கடந்த 2 நாட்களாக வெளிநாட்டு ரிக் இயந்திரங்களை வைத்து மீட்பு பணிக்காக துளையிடும் பணி நடைபெற்று வந்தது. ஆனால் கடினமான பாறைகள் காரணமாக, இயந்திரங்கள் தொடர்ந்து பழுதடைந்தன.
இந்நிலையில் கடின பாறைகளை உடைக்கவும், துளையிடவும் ரிக் இயந்திரத்திற்கு பதிலாக போர்வெல் இயந்திரம் பயன்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக காஞ்சிபுரத்தில் இருந்து போர்வெல் இயந்திரம் ஒன்று வரவழைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் பணியை துரிதப்படுத்த முடியும் என்று அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.