புதுடெல்லி:
நாளை முதல் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு பூஸ்டர் தடுப்பூசி போடப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.
18 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் நாளை முதல் தனியார் தடுப்பூசி மையங்களில் முன்னெச்சரிக்கைத் தவணை கொரோனா தடுப்பூசி என்னும் பூஸ்டர் தடுப்பூசி செலுத்திக் கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இரண்டாவது தவணை தடுப்பூசி செலுத்தி 9 மாதங்கள் நிறைவடைந்தவர்கள் பூஸ்டர் தடுப்பூசி செலுத்திக்கொள்ளலாம் என்றும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
அரசு சார்பில் செலுத்தப்பட்டு வரும் இலவச தடுப்பூசி வழக்கம்போல் செயல்பாட்டில் இருக்கும் என்றும் அங்கு முதல் தவணை, இரண்டாம் தவணை மற்றும் முன்களப் பணியாளர்கள், 60 வயதுக்கு மேற்பட்டோருக்கு முன்னெச்சரிக்கைத் தவணை கொரோனா தடுப்பூசி என்னும் பூஸ்டர் செலுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.