சென்னை: அறிவு வேட்கைக்கான திறவுகோல் புத்தகங்களே என உலக புத்தக நாளையொட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் டிவிட் பதிவிட்டுள்ளார்.

ஏப்ரல் 23 ஆம் நாள் உலகப் புத்தக நாள் (World Book Day) அல்லது உலகப் புத்தக மற்றும் பதிப்புரிமை நாள் (World Book and Copyright Day) என கொண்டாடப்படுகிறது. உலக புத்தக நாள், என்பது வாசித்தல், பதிப்பித்தல் மற்றும் பதிப்புரிமையூடாக அறிவுசார் சொத்துக்களைப் பாதுகாத்தல் போன்றவற்றை வளர்க்கும் நோக்குடன் ஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல் மற்றும் பண்பாட்டு நிறுவனம் (யுனெஸ்கோ) ஆண்டுதோறும் ஏப்ரல் 23 ஆம் நாளன்று உலக புத்தக நாளாக 1995 ஆம் ஆண்டு  அறிவித்து அன்றுமுல் கொண்டாடப்பட்டு வருகிறது.

இன்று உலக புத்தக நாளை முன்னிட்டு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ள டிவிட்டில்,

அறிவு வேட்கைக்கான திறவுகோல் புத்தகங்களே!

திட்டமிட்ட பொய்ப்பரப்புரைகள் உள்ளங்கைக்கே வந்துவிடும்

இக்காலத்தில், உண்மை எனும் புதையலை அடைய

புத்தகங்களே வழிகாட்டி!

ஒருவரை ஒருவர் சந்திக்கும்போது புத்தகங்களைப் பரிமாறிக் கொள்வோம்!

ஆழ வாசிப்போம்! புத்தகங்களை நேசிப்போம்!

என பதிவிட்டுள்ளார்.