சென்னை: தமிழகத்தில் வார இறுதி நாள் ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், ரயில் நிலையங்களில் உள்ள முன்பதிவு அலுவலகங்களும் மூடப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
தமிழகத்தில் கொரோனா 2ம் அலை வேகமாக பரவி வருகிறது. இரவுநேர ஊரடங்கு, ஞாயிற்றுக்கிழமை ஊரடங்கு போன்ற புதிய கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில், தெற்கு ரயில்வே இன்று வெளியிட்டுள்ள செய்தியில் கூறி உள்ளதாவது: தமிழகத்தில் ஏப்ரல் 25ம் தேதி முதல் ஞாயிற்றுக்கிழமை ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே அந்த நாள்களில் டிக்கெட் முன் பதிவு மையங்கள் செயல்படாது.
எனினும், ஆன்லைன் மூலம் டிக்கெட்டுகளை முன்பதிவு மற்றும் ரத்து செய்து கொள்ளலாம். முன்பதிவு அல்லாத டிக்கெட் வழங்கும் மையங்கள் வழக்கம் போல் செயல்படும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.