நடிகை ஸ்ரீ தேவியின் கணவர் போனிகபூர் ‘மைதான்’ என்ற படத்தை தயாரித்துள்ளார். விளையாட்டை மையமாக கொண்ட இந்த படத்தில் அஜய் தேவ்கன், கதாநாயகனாக நடித்துள்ளார்.
அக்டோபர் 15 ஆம் தேதி இந்தப்படம் ரிலீஸ் என சில மாதங்களுக்கு முன்பே போனிகபூர் அறிவித்துள்ளார்.

இந்த நிலையில் அதே நேரத்தில் எஸ்.எஸ்.ராஜமவுலி இயக்கியுள்ள ‘ஆர்.ஆர்.ஆர்.’ திரைப்படமும் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட ஐந்து மொழிகளில் வெளியாகும் இந்த படத்தில் ஜுனியர் என்.டி.ஆர்.- ராம் சரண் ஹீரோவாக நடித்துள்ளனர்.
அஜய் தேவ்கன் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.
அவர் நடித்த இரு படங்கள் ஒரே நாளில் வெளியாவதால், ‘மைதான்’ தயாரிப்பாளர் போனிகபூர் அதிர்ச்சி அடைந்துள்ளார்.
“எஸ்.எஸ்.ராஜமவுலி செய்வது சரி அல்ல. எனது சினிமா வாழ்க்கையில் ஒரே நடிகர் படம் வெளியாவது இதுவே முதன் முறை. ராஜமவுலி நெறிமுறைகளை மீறி விட்டார்” என போனிகபூர் குற்றம் சாட்டியுள்ளார்.
– பா. பாரதி
[youtube-feed feed=1]