மும்பை,

தர்ஷ் கட்டிடம் கட்டியது தொடர்பான ஊழல் வழக்கில் முன்னாள் முதல்வர் அசோக் சவான் மீது வழக்கு தொடர மகாராஷ்டிரா கவர்னர் வித்யாசாகர் ராவ்  அனுமதி அளித்து இருந்தார்.

இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், அளுநர் உத்தரவை மும்பை ஐகோர்டு ரத்து செய்து உத்தரவிட்டது.

கார்கில் போரில் உயிரிழந்த வீரர்களின் குடும்பத்தினருக்காக மும்பையில் ஆதர்ஷ் கூட்டுறவு வீட்டுவசதி சங்கத்தின் சார்பில் அடுக்குமாடிக் குடியிருப்பு கட்டப்பட்டது. இந்த அடுக்குமாடி கட்டித்தில் உள்ள பல வீடுகள் அரசு உயர் அதிகாரிகளுக்கும், அரசியல்வாதிகளுக்கும் ஒதுக்கப்பட்டதாக குற்றம் சாட்டப்பட்டது.

இதையடுத்து, அப்போது முதல்வராக இருந்த  அசோக் சவான் பதவி விலகினார். அவர் மீது வழக்குத் தொடுக்க கடந்த 2013ம் ஆண்டு அப்போதைய ஆளுநர் அனுமதி அளிக்கவில்லை. இந்நிலையில், அதைத்தொடர்ந்த பாஜ சார்பாக நியமிக்கப்பட்ட ஆளுநர் வித்யாசாகர் ராவ் அதற்கு அனுமதி வழங்கினார்.

இதை எதிர்த்து அசோக் சவான் தரப்பில் மும்பை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம் அசோக் சவான் மீது வழக்குத் தொடுக்க ஆளுநர் அனுமதி அளித்ததை ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது.