சென்னை:

சென்னை, போயஸ் கார்டனில் உள்ள ஜெயலலிதா மற்றும் ரஜினிகாந்த் வீடுகளுக்கு  வெடி குண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. இது தொடர்பாக ஒருவரை கைது செய்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இன்று பிரதமர் மோடி சென்னை வரவுள்ள நிலையில், நேற்று மாலை, மர்ம நபர் யாரோ ஒருவர், காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு போன் செய்த, போயஸ் கார்டனில் உள்ள மறைந்த முதல்- அமைச்சர் ஜெயலலிதா வீட்டிலும், அப்பகுதியில் உள்ள ரஜினிகாந்த் வீட்டிலும் சற்று நேரத்தில் குண்டு வெடிக்கப்போகிறது என்று மிரட்டிவிட்டு லைனை துண்டித்துள்ளார்.

இதுகுறித்து சம்பவ இடங்களுக்கு விசாரணை மற்றும் ஆய்வு நடத்திய காவல்துறையினர், அது போலியான மிரட்டல் என தெரிந்ததும், அதுகுறித்து,  தேனாம்பேட்டை போலீசார் விசாரணை நடத்தினார்கள். வி

சாரணையில் வெடிகுண்டு மிரட்டல் விடுத்து பேசிய நபர் கோவையை சேர்ந்த வாலிபர் முகமது அலி என்று தெரியவந்தது. அவரை கைது செய்த கோவை போலீசார், அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.