சென்னை:
முதல்வர் பழனிச்சாமி மற்றும் ரஜினி வீடுகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.
சென்னை கிரீன்வேஸ் சாலையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி வீடு உள்ளது. இங்கு வெடிகுண்டு இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதை தொடர்ந்து வெடிகுண்டு நிபுணர்கள் வீட்டில் சோதனையிட்டனர். ஆனால் வெடிகுண்டு எதுவும் கைப்பற்றப்படவில்லை.
இதேபோல் சென்னை போயஸ்கார்டனில் உள்ள நடிகர் ரஜினி வீட்டிற்கும் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. சோதனையில் வெடிகுண்டு எதுவும் சிக்கவில்லை. இதையடுத்து இரு சம்பவங்களும் புரளி என்று போலீசார் தெரிவித்தனர்.
இது குறித்து போலீசார் மேற்கொண்ட விசாரணையில் கடலூரை சேர்ந்த திலீப் என்பவர் சென்னை போலீஸ் கட்டுப்பாட்டு அறையை தொடர்பு கொண்டு வெடிகுண்டு மிரட்டல் விடுத்திருப்பது தெரியவந்துள்ளது. அவரை பிடிக்க போலீசார் விரைந்துள்ளனர்.