நாக்பூர்
நேற்று நாக்பூர் விமான நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது/

நேற்று காலை மகாராஷ்டிர மாநிலம், நாக்பூர் விமான நிலையத்துக்கு வந்த மெயிலில் விமான நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டு இருந்தது. தகவல் அறிந்த காவல்துறையினர், வெடிகுண்டு தடுப்பு படையினர் உள்ளிட்டோர் விமான நிலையத்துக்கு விரைந்து வந்து அதிரடி சோதனை மேற்கொண்டனர்.
நாக்புர் விமான நிலையத்தில் அங்குலம் அங்குலமாக சோதனை நடத்திய நிலையில், பயணிகளின் உடைமைகளிலும் சோதனை நடத்தியது பயணிகளிடையே பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த சோதனையில் சந்தேகப்படும்படி எதுவும் சிக்கவில்லை எனபதால் யாரோ விஷமி போலி மிரட்டல் விடுத்தது தெரியவந்தது. காவல்துறையினர் இ-மெயிலில் வெடிகுண்டு மிரட்டல் விடுத்த ஆசாமி மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.