சென்னை

ன்று சென்னையில் இருந்து துபாய் செல இருந்த விமானத்துக்கு ஆறாம் முறையாக இ மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடப்பட்டுள்ளது.

இன்று சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்தில் இருந்து துபாய் செல்லவிருந்த எமிரேட்ஸ் நிறுவன விமானத்திற்கு இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.  இந்த மிரட்டல் ஏற்கனவே 5 முறை விடுக்கப்பட்டு தற்போது 6 ஆம் முறையாக விடுக்கப்பட்டுள்ளது.

இந்த மிரட்டலால் துபாய் செல்ல இருந்த எமிரேட்ஸ் விமானத்தில் ஏறி இருந்த பயணிகள் அனைவரையும் கீழே இறக்கிவிட்டு விமானத்தில் வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை நடத்தினர். விமானத்தில் இருந்து பயணிகளின் உடைமைகளை ஓடுதளத்தில் இறக்கிவைத்து சோதனை மேற்கொண்டனர்.

அதிகாரிகள் சுமார் 3 மணி நேர தீவிர சோதனைக்கு பிறகு விமானத்தில் வெடிகுண்டு இல்லை என ள் தெரிவித்துள்ளனர். காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து மிரட்டல் வந்த இ-மெயில் முகவரியை ஆய்வு செய்து வருகிறார்கள்.

இஸ்தான்புல் நகரில் இருந்து இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளதாக அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். இவ்வாறு வெடிகுண்டு மிரட்டல் வந்த எமிரேட்ஸ் விமானமானது இன்று இரவு 11 மணியளவில் சென்னையில் இருந்து துபாய் புறப்படும் என்று விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.