சென்னை: நடிகர் விக்ரம் வீட்டில் வெடிகுண்டு வைத்துள்ளதாக மர்மநபர் மிரட்டல் விடுத்தது பரபரப்பை ஏற்படுத்தியது.
‘
நடிகர் விக்ரம் திருவான்மியூரில் உள்ளது. அங்கு வெடிகுண்டு வைத்துள்ளதாக, காவல்துறை கட்டுப்பாடு அறையை தொடர்பு கொண்ட மர்ம நபர் மிரட்டல் விடுத்துள்ளார். இதையடுத்து வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபர் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மோப்ப நாய் உதவியுடன் வெடிகுண்டு சோதனை நடைபெற்றது.
சமீபத்தில் நடிகர் விஜய்,அஜித், சூர்யாவின் அலுவலகம், விஜயகாந்த், சரத்குமார், தனுஷ் உள்ளிட்ட பலரின் இல்லத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது