ந்தூர்

ன்று காலை இ மெயில் மூலம் இந்தூரில் இரு தனியார் பள்ளிகளுக்கு தமிழ் மொழியில் வெடிகுடு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது,

இன்று காலை மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூரில் கந்த்வா சாலை மற்றும் ராவ் பகுதியில் உள்ள 2 தனியார் பள்ளிகளுக்கு மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல்கள் வந்ததால் பள்ளிகளுக்கு வந்த மாணவர்கள் உடனே வெளியேற்றப்பட்டனர்.

சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர், வெடிகுண்டு அகற்றும் குழுக்கள் இரு பள்ளிகளிலும் சோதனை மேற்கொண்டனர். அவர்கள் எந்த வெடிபொருளும் கண்டுபிடிக்கப்படவில்லை என்றும் இது புரளியாக இருக்கலாம் என்றும் தெரிவித்தனர்.

இந்தூர் மாவட்ட கூடுதல் துணை காவல் ஆணையர் செய்தியாளர்களிடம்,

”இரண்டு பள்ளிகளிலும் RDX வைக்கப்பட்டிருந்ததாக மின்னஞ்சலில் செய்தி வந்துள்ளது. வெடிகுண்டு மிரட்டல் வந்த மின்னஞ்சலில் சில தகவல்கள் தமிழ் மொழியில் இடம்பெற்றிருந்தன. இதுகுறித்து காவல்துறையினர் விசாரணையைத் தொடங்கியுள்ளனர்”

எனத் தெரிவித்துள்ளார்.threat