சென்னை: விமான நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த கம்ப்யூட்டர் இன்ஜினியர்கள் இருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
சென்னை சர்வதேச விமான நிலையத்தில் வெடி குண்டு வைக்கப்பட்டுள்ளதாக, பள்ளிக்கரணை காவல் நிலையத்திற்கு தொலைபேசி மூலம் மிரட்டல் விடுக்கப்பட்டது. இதையடுத்து உடனடியாக வெடி குண்டு நிபுணர்கள் விமான நிலையத்திற்கு விரைந்து வந்து சோதனை மேற்கொண்டனர்.
ஆனால் வெடிகுண்டுகள் ஏதும் இல்லை. இதையடுத்து இது பொய்யான மிரட்டல் என்பது தெரியவந்தது. மிரட்டல் விடுத்த மர்மநபர்களை காவல்துறையினர் தீவிரமாக தேடி வந்தனர். இந்நிலையில் இன்று காலை வெடிகுண்டு மிரட்டல் விடுத்த இருவரை கைது செய்தனர். அவர்கள் இருவரும் கம்ப்யூட்டர் இன்ஜினியர் என்று தெரியவந்துள்ளது. அவர்களிடம் காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதேபோல் கடந்த இரு தினங்களுக்கு முன்பாக ஹைதராபாத்திலிருந்து சென்னை வந்த விமானத்தில் வெடிகுண்டு வைத்திருப்பதாக மிரட்டல் விடுக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.