சென்னை
நேற்றிரவு தமிழக ஆளுநர் மாளிகைக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதால் கடும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

தற்போது தமிழக ஆளுநராக செயல்பட்டு வரும் ஆர்.என்.ரவி வசித்து வரும். தமிழக ஆளுநர் மாளிகை சென்னை கிண்டியில் உள்ளது. நேற்றிரவு தமிழக ஆள்நர் மாளிகைக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.
இந்த வெடிகுண்டு மிரட்டல் இ-மெயில் மூலம் விடுக்கப்பட்டுள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த ஆளுநர் மாளிகை ஊழியர்கள் உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் அளித்துள்ளனர், இதனால் அப்பகுதியில் பரபரப்பான சூழ்நிலை நிலவி வருகிறது.
ககவல் அறிந்து ஆளுநர் மாளிகைக்கு விரைந்து வந்த காவல்துறையினர் மோப்பநாய் உதவியுடன் போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர். இந்த சோதனையில் இதுவரை சந்தேகத்துக்குரிய பொருட்கள் ஏதும் கிடைக்கவில்லை எனசொல்லப்படுகிறது.