சென்னை: சென்னையின் பிரபலமான பள்ளியான செட்டிநாடு வித்யாஷ்ரம் பள்ளிக்கு 9 வது முறையாக வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது. அதவும் தமிழ்நாடு  டிஜிபி சங்கர் ஜிவால் பெயரில் இமெயில் மூலம் பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி ள்ளது.

தொடர் இமெயில் மிரட்டல் சம்பவம் குறித்து சென்னை மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தமிழ்நாட்டில் உள்ள பிரபலமான பள்ளிகளில் கடந்த சில மாதங்களாக அவ்வப்போது இமெயில் மூலம் மிரட்டல் வந்துகொண்டிருக்கிறது. இதுகுறித்து சைபர் கிரைம் காவல்துறை வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. இந்த இமெயில் மிரட்டல்கள்  வெளிநாடுகளில் இருந்து வருவதாகவும், இதுகுறித்து சர்வதேச போலீஸ் உதவியை நாடியிருப்பதாகவும் தமிழ்நாடு காவல்துறை கூறியிருந்தது.

இந்த நிலையில், செட்டிநாடு வித்யாஷ்ரம் பள்ளிக்கு இன்று  9-வது முறையாக வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.  அதவுதும் தமிழ்நாடு டி.ஜி.பி சங்கர் ஜிவால் பெயரில்  போலி  இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. இது தமிழ்நாடு காவல்துறைக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

 தொடர் இ-மெயில் மிரட்டல் சம்பவம் குறித்து சென்னை மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.  இமெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபர் யார் என்று கண்டுபிடிக்க கோரி போலீசில் பள்ளி நிர்வாகம் புகார் தெரிவித்துள்ளது. இதையடுத்து சென்னை மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் போலீசார், பட்டினப்பாக்கம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மடிப்பாக்கத்தில் உள்ள ஒரு தனியார் பள்ளி, மவுண்ட் ராணுவ பள்ளிக்கும் இ-மெயில் மூலமாக வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. சம்பவ இடத்திற்கு வந்த வெடிகுண்டு நிபுணர்கள், மோப்ப நாய் உதவியுடன் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு நிலவி வருகிறது.