ஸ்ரீநகர்:

ஜம்மு காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டத்தில் காவல் நிலையத்தின் மீது தீவிரவாதிகள் இன்று வெடிகுண்டு வீசி தாக்குதல் நடத்தினர்.

இதைதொடர்ந்து அங்கிருந்த ஒரு போலீஸ்காரர் அவர்களை நோக்கி துப்பாக்கியால் சுட்டார். ஆனால் அதற்குள் தீவிரவாதிகள் அங்கிருந்து தப்பிவிட்டனர்.

அந்த பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். தீவிரவாதிகளை தேடும் பணி முடுக்கிவிடப்பட்டுள்ளது.