கொரோனா பரவல் காரணமாக சுற்றுலா பயணிகளின் சொர்க்கபூமியான மாலத்தீவு கடந்த ஏழெட்டு மாதங்களாக களை இழந்து காணப்பட்டது. ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்ட பிறகு மாலத்தீவு மீண்டும் உயிர் பெற்றுள்ளது.
அணமையில் காதல் திருமணம் செய்து கொண்ட நடிகை காஜல் அகர்வால், தனது கணவர் கவுதமுடன் மாலத்தீவில் தேனிலவை கொண்டாடினார்.
அங்கு எடுக்கப்பட்ட போட்டோக்களை தினமும் தனது இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு, மாலத்தீவுக்கு பெரிய விளம்பரத்தை கொடுத்தார். இதனால் ஏராளமான நட்சத்திரங்கள் மாலத்தீவில் குவிந்த வண்ணம் உள்ளனர்.
ராகுல் ப்ரீத் சிங், திஷா, தாரா, டைகர் ஷராப் என பலர் இப்போது அங்கு முகாமிட்டுள்ளனர்.
“லிங்கா” கதாநாயகி சோனாக்ஷி சின்ஹா, மாலத்தீவு கடற்கரையிலும், கடலிலுமாக நீச்சல் உடையில் தோன்றும் படங்களை வெளியிட்டு கிளுகிளுப்பு ஏற்படுத்தியுள்ளார்.
தெலுங்கு நடிகர் நாக சைதன்யா, தனது 34 வது பிறந்த நாளை காதல் மனைவி சமந்தாவுடன் மாலத்தீவில் நேற்று கொண்டாடியுள்ளார்
பிறந்த நாளை யொட்டி நாக சைதன்யா நடிக்கும் ‘லவ் ஸ்டோரி’ என்ற படத்தின் முதல் போஸ்டர் ஐதராபாத்தில் நேற்று வெளியிடப்பட்டது.
லுங்கியும் பனியனும் அணிந்து அந்த போஸ்டரில் நாக சைதன்யா, கிராமத்து இளைஞனாக தோன்றும் காட்சி ரசிகர்களை பெரிதும் கவர்ந்துள்ளது.
– பா. பாரதி