டில்லி:
இந்தியாவில், போயிங் 737 மேக்ஸ் ரக விமானங்களை இந்திய வான்பரப்பில் இயக்க கூடாது என்று விமான நிறுவனங்களுக்கு இந்திய விமானப் போக்குவரத்து இயக்குநரகம் உத்தரவிட்டு உள்ளது. இது விமான நிறுவனங்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அதே நேரத்தில் விமான பயணிகளுக்கும் பெருத்த பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது.
சமீபத்தில் நடைபெற்ற போயிங் 737 எதியோப்பிய விமான விபத்தை தொடர்ந்து பல நாடுகள், போயிங் 737 விமானம் பறக்க தடை செய்துள்ளன. இதையடுத்து, அந்த ரக விமானங்களில் ஏதேனும் கோளாறு இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படும் நிலையில், அவ்வாறு எந்த பிரச்சனை யும் இல்லை என்று விமானத்தை தயாரித்து வரும் அமெரிக்காவை சேர்ந்த போயிங் நிறுவனம் உறுதிபட தெரிவித்துள்ளது.
இந்த நிலையில், இந்தியாவில் பாஜக ஆதரவாளர் நிறுவனமான ஸ்பைஸ் ஜெட் விமான நிறுவனம் ஏராளமான போயிங் 737 விமானங்களை கொண்டு விமான சேவை தொடர்ந்து வந்தது. இது விமான பயணிகளின் உயிரோடு விளையாடும் செயல் என்று கடுமையாக விமர்சிக்கப்பட்டது.
இந்த நிலையில், போயிஸ் 737 மேக்ஸ் விமான சேவைக்கு, ஏற்கனவே சீனா, சிங்கப்பூர் போன்ற நாடுகள் தடை விதித்த நிலையில், தற்போது ஜெர்மனி, ஆஸ்திரேலியா, மலேசியா, ஓமன் உள்பட 13 நாடுகள் போயிங் 737 மேக்ஸ் 8 ரக விமானத்தை இயக்க தடை விதித்துள்ளன.
இந்த நிலையில் இந்தியாவில் போயிங் 737 மேக்ஸ் விமானங்களை இயக்கப்பட்டு வருவது குறித்து இன்று சிவில் விமான போக்குவரத்து துறை ஆலோசனை நடத்தியது. அதைத் தொடர்ந்து, இன்று பிற்பகல் முதல் விமானம் இயக்க தடை விதித்து செவ்வாய்கிழமை இரவு விமானப் போக்குவரத்து இயக்குநரகம் உத்தரவிட்டது. அதுபோல போயிங் 737 ரக வெளிநாட்டு விமானங்க ளும் இந்திய வான்பரப்பிற்குள் நுழைவதற்கும் தடை விதிக்கப்பட்டது.
இந்தியாவில் போயிங் 737 மேக்ஸ் ரக விமானங்கள் ஸ்பைஸ்ஜெட், ஜெட்ஏர்வேஸ் ஆகிய இரு நிறுவனங்களிடம் மட்டும்தான் உள்ளன.
ஜெட்ஏர்வேஸ் நிறுவனம் ஏற்கனவே கடன் நெருக்கடி காரணமாக தனது விமானங்கள் இயக்கு வதை நிறுத்திவிட்டது. தற்போது ஸ்பைஸ் ஜெட் நிறுவனம் மட்டுமே போயிங் விமானங்களை இயக்கி வந்தது. ஸ்பைஸ் ஜெட் விமான நிறுவனத்திடம் சமார் 500 போயிங் விமானங்கள் இருப்பதாக கூறப்படுகிறது. இதில் 14 விமானங்கள் இன்று ரத்து செய்யப்பட்ட நிலையில், மேலும் பல விமானங்களை ரத்து செய்ய இருப்பதாக கூறப்படுகிறது.
இதன் காரணமாக அந்த விமானங் களில் முன்பதிவு செய்திருந்த பயணிகள் மாற்று வழியை நாட வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளனர். இது விமான பயணிகளிடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.மாற்று விமானத்திற் கான டிக்கெட் விலையும் அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது.
விமானங்கள் ரத்து தொடர்பாக பயணிகள் புகார் தெரிவிக்க சிறப்பு கட்டுப்பாட்டு அறை திறக்கப்பட இருப்பதாக ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் தெரிவித்துள்ளது.