செப்டம்பரில், புடாபெஸ்டில் நடைபெறும் செஸ் ஒலிம்பியாட் போட்டியில் இங்கிலாந்து மகளிர் அணியில் புதிதாக இடம்பிடித்துள்ளார் போதனா சிவானந்தன்.
ஒன்பது வயதே ஆன போதனா கொரோனா ஊரடங்கு காலகட்டத்தில் அவருக்கு பரிசாக கிடைத்த செஸ் போர்டை வைத்து சதுரங்கம் கற்றுக் கொண்டவர்.
இன்று உலக அரங்கில் இங்கிலாந்து அணிக்காக விளையாடும் இளம் வீரராக களமிறங்க உள்ளார்.
ஐந்து வயதில் துவங்கிய அவரது செஸ் விளையாட்டு பயணத்தில் பல்வேறு போட்டிகளில் கலந்து கொண்டு பட்டம் வென்றுள்ளார்.
தமிழ்நாட்டில் பிறந்தவரான போதனாவின் தந்தை சிவானந்தன் பொறியியல் பட்டதாரியான தனக்கும் தன் மனைவிக்கும் செஸ் என்பதே என்ன என்று அதிகம் தெரியாது.
இருந்தபோதும் தனது மகளுக்கு செஸ் மீது இருக்கும் ஆர்வத்தையும் அதில் அவர் புரிந்துவரும் சாதனையையும் கண்டு அதிசயித்து வருகிறார்.
எட்டு வயதுக்குட்பட்டோருக்கான கிளாசிக்கல், ரேபிட் மற்றும் பிளிட்ஸ் வடிவங்களில் நடத்தப்படும் மூன்று செஸ் உலக சாம்பியன்ஷிப்களையும் போதனா வென்றுள்ளார்.
முதல் முறையாக உலக அரங்கில் நடைபெறும் செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் பங்கேற்க இருக்கும் இளம் வீரர் என்ற வரலாறு படைத்துள்ள போதனா கிராண்ட்மாஸ்டர் ஆவதே தனது கனவு என்று கூறுகிறார்.