சென்னை,
ருப்பு பணம் ஒழிப்பு என்ற பெயரில் தமாஷ் செய்கிறார் மோடி என்று தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கர சர் கூறியுள்ளார்.
மேலும் செயல்படாத காங்கிரஸ் நிர்வாகிகள் நீக்கப்பட்டு புதிய நிர்வாகிகள் நியமிக்கப்படுவர் என்றும் கூறினார்.
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைமையகமான சென்னை சத்தியமூர்த்தி பவனில், தமிழ்நாடு காங்கிரஸ் கலை இலக்கிய அணி மாநில, மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது.
தொடர்ந்து தமிழக காங்கிரஸ் கட்சியின் பிற்படுத்தப்பட்டோர் பிரிவு மாநில நிர்வாகிகள் மற்றும் மாவட்ட தலைவர்கள் கலந்தாய்வு கூட்டம் சத்தியமூர்த்தி பவனில்  நடைபெற்றது.
tncc1
இதில் கட்சியின் மாநிலத் தலைவர் திருநாவுக்கரசர் கலந்து கொண்டு உரையாற்றினார். பின்னர் நிருபர்களிடம் கூறியதாவது:-
கட்சியில் உள்ள அனைத்து பிரிவு நிர்வாகிகளுடனும் ஆலோசனை கூட்டம் நடந்து வருகிறது. இதில் செயல் படாத மாநில, மாவட்ட நிர்வாகிகள் பற்றிய விவரம் சேகரிக்கப்படும். இதுகுறித்து கட்சி தலைவர்களுடன் ஆலோசனை நடத்தி செயல்படாத கட்சி நிர்வாகிகள் நீக்கபட்டு,. புதிய நிர்வாகிகள் விரைவில் நியமிக்கப்படு வார்கள் என்றார்.
மேலும், பிரதமர் மோடி கருப்பு பணம் ஒழிப்பு என்ற பெயரில் தமாஷ் செய்கிறார். கருப்பு பண ஒழிப்பு என்பது அனைவரும் வரவேற்கும் வி‌ஷயம்.
ஆனால்,  முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்து பணத்தட்டுப்பாடு இல்லாமல் பொதுமக்கள் பாதிக்காத அளவுக்கு இதனை செய்திருக்க வேண்டும்.
தற்போது மாத சம்பளதாரர்கள் வங்கியில் இருந்து பணத்தை எடுக்க முடியாத நிலை உள்ளது. பழைய 500, 1000 ரூபாய் நோட்டை மாற்ற கூடுதல் அவகாசம் வழங்க வேண்டும் என்று மத்திய அரசுக்க கோரிக்கை விடுத்தார்.
கூட்டத்தில் காங்கிரஸ் மூத்த தலைவர் குமரி அனந்தன், கிருஷ்ணசாமி, சிரஞ்சீவி, செல்வப் பெருந்தகை, கோபண்ணா, தணிகைமணி, துறைமுகம் ரவிராஜ், அகரம் கோபி, துளசிராமன், ஜேக்கப் தன்ராஜ், பெருமாள்சாமி, வேளச்சேரி செல்வம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.