டில்லி:
ங்கி நெறிமுறைகளை மீறி கருப்பு பணம் மாற்ற உதவியாக 27 வங்கி அதிகாரிகள் தற்காலிக்க பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர் என மத்திய அரசுஅ றிவித்து உள்ளது.
ரிசர்வ் வங்கி நெறிமுறைகளை மீறிய 27 வங்கி அலுவலர்களை மத்திய நிதி அமைச்சம் அதிரடியாக சஸ்பெண்ட் செய்துள்ளது. மேலும், 6 பேரை இடமாற்றம் செய்துள்ளது.
finance1
ரூ.500, 1000 செல்லாது என்று மத்தியஅரசு அறிவித்தபிறகு நாடு முழுவதும் பழைய நோட்டுகளை மாற்ற மக்கள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். மத்திய அரசு அறி வித்து 25 நாட்களாகியும் ஏழைய எளிய மற்றும் நடுத்தர மக்கள் கைசெலவுக்கு பணம் இல்லாமல் இன்றுவரை வங்கிகளின் வாசலிலும், ஏடிஎம் இயந்திரம் முன்பு காத்து கிடந்து வருகின்றனர்.
ஆனால், பண முதலைகள், அரசியல்வாதிகள், அமைச்சர்கள்  போன்றோர் தங்களிடம் உள்ள கருப்பு பணத்தை வீட்டில் இருந்த படியே வங்கி அதிகாரிகள் துணையோடு கருப்பு பணத்தை வெள்ளையாக மாற்றி வருகிறார்கள்.
இது மக்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது. கறுப்பு பண முதலைகளின் சட்ட விரோத முயற்சிக்கு வங்கி அதிகாரிகள் சிலர் உதவுவதாக தகவல்கள் வெளியாகின. இதைத்தொடர்ந்து  நாடு முழுவதும் உள்ள பொதுத்துறை வங்கிகளை மத்திய நிதி அமைச்சகம் கண்காணித்து வந்தது.
இதை தொடர்ந்து, நாடு முழுவதும் உள்ள அனைத்து வங்கிகளுக்கும் பண பரிவரித்தனைகள் தொடர்பாக பல்வேறு நெறிமுறைகள் மற்றும் கட்டுபாடுகளை ரிசர்வ் வங்கி அறிவித்தது.
அதில், பண பரிமாற்றம் தொடர்பான விஷயங்களில் வங்கி அலுவலர்கள் கவனமாக இருக்க வேண்டும். பரிவர்த்தனை ஆவணங் களை முறையாக பராமரிக்க வேண்டும். கறுப்பு பண பதுக்கல்காரர்களுக்கு எவ்விதத்திலும் உதவ கூடாது. அவ்வாறு உதவி செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கப்பட்டு இருந்தது.
அதையும் மீறி, கருப்பு பண முதலைகளுக்கு உதவியதாக, பொதுத துறை வங்கிகளை சேர்ந்த 27 வங்கி அலுவலர்களை மத்திய நிதி அமைச்சகம் அதிரடியாக சஸ்பெண்ட் செய்துள்ளது. மேலும் 6 பேர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.