சென்னை:

மத்திய அமைச்சர் வெங்கையா நாயுடு நிருபர்களிடம் கூறுகையில், வருமான வரித் துறை சோதனையை ராமமோகன ராவ் திசை திருப்புகிறார். வருமான வரித்துறையினர் தங்களது கடமைகளை செய்தனர். ராமமோகன ராவ் தேவையற்ற பிரச்னையை எழுப்புகிறார். இதில் எந்த ஒரு அரசியல் தலையீடு இல்லை. 50 நாட்களில் கறுப்பு பணத்தை ஒழித்துவிட முடியாது என்றார்.
5& நாட்கள் பொறுத்துக் கொண்டால் நாட்டில் கறுப்பு பணமே இருக்காது. ஏழைகள் இருக்கமாட்டார்கள் என்று பிரதமர் மோடியும், மத்திய அமைச்சர்கள் கூறிவந்தனர். இந்நிலையில் 50 நாட்களில் கறுப்பு பணத்தை ஒழிக்க முடியாது என்று வெங்கையா நாயுடு பல்டி அடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.