புதுடெல்லி:
ந்தியர்கள் வெளிநாட்டு வங்கிகளில் பதுக்கி வைத்திருக்கும் கருப்பு பணம் பற்றிய வழக்கின் இடைக்கால அறிக்கையை சிறப்பு புலனாய்வு குழு தாக்கல் செய்ய இருக்கிறது.
 
வெளிநாடுகளில் கருப்பு பணத்தை பதுக்கினால் 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. கருப்பு பணம் பற்றி விசாரணை நடத்துவதற்காக, சுப்ரீம் கோர்ட்டு உத்தரவின் பேரில், சிறப்பு புலனாய்வு குழு அமைக்கப்பட்டுள்ளது.

2011ம் ஆண்டே சுவிஸ் வங்கியில் கருப்பு பணம் பதுக்கி வைத்து இருப்பவர்களின் 628 பேர் கொண்ட பட்டியலை பிரான்சு அரசு இந்தியாவு கொடுத்தது. மேலும் சுவிஸ் நாட்டின் எச்எஸ்பிசி வங்கியில் பதுக்கி வைத்திருந்த 1195 பேர்களின் விவரமும் மத்திய அரசுக்கு கிடைத்தது.  இவர்கள்  பதுக்கி வைத்துள்ள   கருப்பு பணத்தின் மொத்த மதிப்பு ரூ.25 ஆயிரத்து 420 கோடி ஆகும்.
கருப்பு பண விவகாரத்தில் சுப்ரீம் கோர்ட்டு உத்தரவுபடி மத்திய அரசால் அமைக்கப்பட்ட சிறப்பு புலனாய்வுக் குழு விசாரணை மேற்கொண்டு ஏற்கனவே 4 இடைக்கால அறிக்கைகளை சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்துள்ளது.
தற்போது 5வது இடைக்கால அறிக்கையை , ஆகஸ்ட் முதல் வாரத்தில் தாக்கல் செய்யவுள்ளது.  இந்த அறிக்கையில், உள்நாட்டில் கருப்பு பணத்தை கட்டுப்படுத்துவது தொடர்பாக சில பரிந்துரைகளை தாக்கல் செய்யவுள்ளதாக சிறப்பு புலனாய்வுக் குழு தெரிவித்துள்ளது.