21ஆம் தேதி வீடுகள் தோறும் கருப்புக்கொடி போராட்டம்… திமுக அறிவிப்பு

Must read

சென்னை:
மிழகத்தில் மின் கட்டணக் கொள்ளையைக் கண்டித்து, வரும் 21ஆம் தேதி வீடுகள் தோறும் கருப்புக்கொடி ஏந்தி போராட்டம்  நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று காலை  தி.மு.க. மாவட்டச் செயலாளர்கள் மற்றும் சட்டமன்ற நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் நடத்திய காணொளி காட்சி வாயிலான கூட்டத்தைத் தொடர்ந்து, இந்த முடிவு அறிவிக்கப்பட்டு உள்ளது.

தமிழகத்தில் கொரோனா ஊரடங்கு காரணமாக மின் கட்டணம் வழக்கத்தைவிட அதிகமாக வசூலிப்பதாக புகார்கள் கூறப்பட்டு வருகிறது. ஆனால், தமிழக மின்சாரா வாரியம் அதை ஏற்றுக்கொள்ள மறுத்து வருகிறது.
இந்த நிலையில்,  மின்கட்டண உயர்வு உள்பட தமிழகஅரசியல்  விவகாரம் குறித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்  இன்று  காணொலியில் திமுக மாவட்ட செயலாளர், எம்பிக்கள், எம்எல்ஏக்களுடன் ஆலோசனை மேற்கொண்டார்.
இந்த ஆலோசனை கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி, மின்கட்டண உயர்வை கண்டித்து வரும் 21ஆம் தேதி தமிழகம் முழுவதும் திமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

More articles

Latest article