கவுகாத்தி:

அசாம் மாநிலம் தேஜ்பூர் விமானப்படை தளத்தில் இருந்து சுகோய் -30 ரக போர் விமானம் 2 விமானிகளுடன் கடந்த 23–ம் தேதி காலை 10.30 மணிக்கு வழக்கமான பயிற்சிக்கு புறப்பட்டது.

தேஜ்பூரில் இருந்து 60 கி.மீ. தொலைவில் துபியா என்ற இடத்தில் பறந்தபோது விமானம் திடீரென மாயமானது. ரேடாரின் இணைப்பில் இருந்து துண்டிக்கப்பட்டது. மாயமான விமானத்தை தேடும் பணி நடந்தது. விமான தொடர்பு துண்டிக்கப்பட்ட பகுதியில் விமானத்தின் பாகங்கள் கண்டுபிடிக்கப்பட்டது.

இதனால் போர் விமானம விபத்துக்குள்ளானது உறுதியானது. இந்நிலையில் விமானம் விழுந்த இடத்தில் இருந்து கருப்பு பெட்டியை மீட்புக்குழுவினர் மீட்டுள்ளனர்.

இதைக்கொண்டு விமானம் விபத்தில் சிக்கியது குறித்து தகவல் தெரியவரும். இந்த விமானம் கடந்த 1990-ம் ஆண்டு முதல் இந்திய விமானப்படையில் பயன்படுத்தப்பட்டு வந்தது என்பது குறிப்பிடத்தக்கது.