சண்டிகர்,
காஷ்மீர் முன்னாள் முதல்வர் பரூப் அப்துல்லா கன்னத்தில் லால் சவுக் மைதானத்தில் வைத்து அறைய வேண்டும் என்று பாஜக பிரமுகரான சுரஜ்பால் அமு பேசி மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளார்.
இவர்தான் சமீபத்தில் பத்மாவதி திரைப்படம் குறித்து சர்ச்சையை ஏற்படுத்தியவர். தற்போது பரூப் அப்துல்லாவின் கன்னத்தில் அறைய வேண்டும் என்று கூறி இருக்கிறார்.
பரூப் அப்துல்லா சமீபத்தில், காஷ்மீர் லால் சவுக்கில் தேசிய கொடி ஏற்ற மத்திய அரசுக்கு தைரியம் உள்ளதான என கேள்வி எழுப்பி சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தார்.
இந்நிலையில், அரியானா, பா.ஜ.க தலைமை செய்தித் தொடர்பாளரான சூரஜ் பால் அமு, காஷ்மீரின், லால் சவுக்கில் தேசியக் கொடி ஏற்ற, மத்திய அரசுக்கு தைரியம் உள்ளதா? என, தேசிய மாநாட்டு கட்சி தலைவர், பரூக் அப்துல்லா கேட்டுள்ளார்.
எனக்கு, இப்போதைக்கு ஒரே ஒரு கனவு தான் உள்ளது. லால் சவுக்கில் வைத்து, பரூக் அப்துல்லா கன்னத்தில் ஓங்கி அறைய வேண்டும் என்ற கனவு தான் அது எனக் கூறினார்.
இவர், பத்மாவதி படத்தில் நடித்ததற்காக நடிகை தீபிகா படுகோனே தலைக்கு, 10 கோடி ரூபாய் பரிசு அளிப்பதாக மிரட்டல் விடுத்ததன் காரணமாக அவருக்கு பாஜக மேலிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியிருந்தது. இதையடுத்து, கட்சியின் செய்தி தொடர்பாளர் பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்த சூரஜ் பால் மீண்டும் சர்ச்சையை உருவாக்கி உள்ளார்.