டில்லி

பிரதமர் மோடி தலைமையில் பாஜக வின் ஆட்சிமன்றக் குழுக் கூட்டம் டில்லியில் நடைபெறுகிறது.

இமாசலப் பிரதேசம் மற்றும் குஜராத் சட்டமன்ற தேர்தலின் வக்கு எண்ணிக்கை முடிவடைந்துள்ளது.   இமாசலப் பிரதேச மாநிலத்தில் காங்கிரஸிடம் இருந்து பாஜக ஆட்சியைக் கைப்பற்றி உள்ளது.  குஜராத்தில் ஆட்சியை பாஜக தக்கவைத்துக் கொண்ட போதிலும் காங்கிரஸுக்கும் 77 இடங்கள் கிடைத்துள்ளது.

இன்று பாஜக வின் ஆட்சி மன்றக் குழுக் கூட்டம் டில்லியில் நடை பெற்று வருகிறது.  பிரதமர் மோடியின் தலைமையில் நடைபெறும் இந்தக் கூட்டத்தில் இமாசலப் பிரதேசம் மற்றும் குஜராத் வெற்றி,  மற்றும் தற்போது நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்படும் விவகாரங்கள் ஆகியவை குறித்து ஆலோசனை நடத்தப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.