ஸ்ரீநகர்: ஜம்மு-காஷ்மீர் பாஜக தலைவர் ரவீந்தர் ரெய்னாவுக்கு கொரோனா உறுதியானதால் அவருடன் தொடர்பில் இருந்த மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் தனிமைப்படுத்திக்கொண்டார்.
காஷ்மீரில் சில வாரங்களுக்கு முன் பாஜக பிரமுகர் வாசிம்பாரி உள்ளிட்ட 3 பேர் பயங்கரவாதிகளால் சுட்டுக்கொல்லப்பட்டனர். அவர்களின் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூற மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் பாஜக தேசிய செயலர் ராம் மாதவ் உள்ளிட்டோர் சில நாட்களுக்கு முன்பு வாசிம் பாரி இல்லம் சென்றனர்.
அவர்களுடன் பாஜக தலைவர் ரவீந்திர ரெய்னாவும் சென்றார். இந்நிலையில் ரவீந்திராவுக்கு இன்று உடல் பரிசோதனை செய்த போது கொரோனா தொற்று உறுதியானது.

இதையடுத்து அவருடன் தொடர்பில் இருந்த ஜிதேந்திர டெல்லியில் தன்னை தனிமைப்படுத்திக்கொண்டார். இதனை அவர் தமது டுவிட்டர் பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். இதேபோன்று ராம் மாதவ்வும் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார்.
Patrikai.com official YouTube Channel