போபால்

பாஜக ஆளும் மத்தியப் பிரதேச மாநில பெண் அமைச்சர் உஷா தாக்குர் தன்னுடன் செல்ஃபி எடுப்போர் ரூ.100 தரவேண்டும் எனக் கூறி உள்ளார்.

பாஜக ஆட்சி செய்யும் மாநிலங்களில் மத்தியப் பிரதேசமும் ஒன்றாகும்.  இங்கு முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் தலைமையிலான அமைச்சரவையில் கலாச்சாரத்துறை அமைச்சராக உஷா தாக்குர் என்னும் பெண் பதவியில் இருக்கிரார்.   இவர் சமீபத்தில் சில அதிரடி அறிவிப்புக்கள் வெளியிட்டுள்ளார்.

நேற்று இவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், இனி என்னுடன் செல்ஃபி எடுத்துக் கொள்ளும் தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகள் உள்ளிட்ட அனைவரும் பாஜக வளர்ச்சிக்கு ரூ.100 செலுத்த வேண்டும்.  இவர்கள் செல்ஃப் எடுப்பதால் என்னுடைய பணிகளை நான் கவனிப்பதில் தாமதம் உண்டாகிறது.

எனக்கு மலர் மாலைகள், பூங்கொத்துக்கள் ஆகியவற்றை யாரும் அளிக்க வேண்டாம்.  ஏனெனில் மலர்களில் லட்சுமி தேவி குடியிருப்பதால் இந்த மலர்களைப் பரிசுத்தரான பகவான் கிருஷ்ணருக்கு மட்டுமே அளிக்க வேண்டும்.   எனக்கு இதற்கு பதில் புத்தகங்கள்: அளித்தால் போதுமானது” எனத் தெரிவித்துள்ளார்.