டெல்லி: மக்களவை தேர்தலில் பாஜக தமிழ்நாட்டில் இரட்டை இலக்க இடங்களை பிடிக்கும் என தேர்தல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோர் தெரிவித்து உள்ளார். இவர் கடந்த 2021ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலின்போது, திமுகவின் வெற்றிக்காக தேர்தல் வியூகங்களை வகுத்த ஐபேக் நிறுவன தலைவரான பிரசாந்த் கிஷோர், தற்போதைய நாடாளுமன்ற தேர்தல் நிலவரம் குறித்த தனது கணிப்பை தெரிவித்து உள்ளார்.
நாடுமுழுவதும் 18வது மக்களவைக்கான தேர்தல் நடைபெற உள்ள நிலையில், ஆட்சியை தக்க வைத்துக்கொள்ள தேசிய ஜனநயாக கூட்டணி முயற்சித்து வரும் நிலையில், ஆட்சியை கைப்பற்ற இண்டி கூட்டணியும் வியூகங்களை அமைத்து செயலாற்றி வருகிறது. இதனால், தேர்தல் களம் தகதகவென தகித்துக்கொண்டிருக்கிறது.
இந்த நிலையில், மக்களவை தேர்தலில் தேர்தலில் பாஜகவுக்கு எத்தனை சீட்டுகள் கிடைக்கும்.. தமிழ்நாட்டில் வாக்கு சதவீதம் வாக்கு கிடைக்கும், எத்தனை சீட் கிடைக்கும் என்பது குறித்து, தேல்தல் வியூக வகுப்பாளரும், அரசியல் சாணக்கியனுமான, பிரசாந்த் கிஷோர் பிடிஐ செய்தி நிறுவனத்துக்கு பிரத்யேக பேட்டி அளித்துள்ளார்.
அதில், தமிழ்நாடு உள்பட தென்மாவட்டங்களில் பாஜகவின் வாக்கு வங்கி கணிசமாக உயரும் என்றும், ஆருடம் “இயல்பாக பலம் குறைவான கிழக்கு மற்றும் தெற்கு இந்திய மாநிலங்களில் பாஜகவின் வாக்குகள் கணிசமாக உயரும் என பிரசாந்த் கிஷோர் தெரிவித்துள்ளார்.,
தற்போது செயல்பாட்டில் உள்ள நாடாளுமன்றத்தின் 17-வது மக்களவைக்கான காலம் வருகிற ஜூன் 16ந்தேதியுடன் முடிவடையும் நிலையில், 18வது மக்களவை அமைக்கப்படுவதற்காக மக்களவை தேர்தல் தேதிகள் அறிவிக்கப்பட்டு அதன்படி, மக்களவைத் தேர்தல் ஏப்ரல் 19 தொடங்கி ஜூன் 1 வரை 7 கட்டங்களாக நடைபெறுகிறது. முதல்கட்ட தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஏப்ரல் 19ந்தேதி நடைபெறுகிறது. 2-ம் கட்ட தேர்தல்கள் ஏப்ரல் 26-ம் தேதியும், 3-ம் கட்ட தேர்தல் மே 7-ம் தேதியும், 4-ம் கட்ட தேர்தல் மே-13-ம் தேதியும், 5-ம் கட்ட தேர்தல் மே 20-ம் தேதியும், 6-ம் கட்ட தேர்தல் மே-25-ம் தேதியும், 7-ம் கட்ட தேர்தல் ஜூன் 1-ம் தேதியும் நடைபெறும் என்றும் வாக்கு எண்ணிக்கை ஜூன் 4ந்தேதி நடைபெறும் என்றும் இந்திய தலைமைத் தேர்தல் ஆணையர் அறிவித்துள்ளார்.
முதல்கட்ட வாக்குப்பதிவு வரும்19ந்தேதி அன்று தமிழகம், புதுச்சேரி உள்பட 21 மாநிலங்களில் நடைபெற உள்ளது. மேலும், அன்றைய தினமே தமிழகத்தில் காலியாக உள்ள விளவங்கோடு சட்டப்பேரவைத் தொகுதிக்கான இடைத்தேர்தலும் நடைபெறுகிறது. இதையொட்டி, அனல்பறக்கும் பிரசாரம் நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில், பிரபல தேர்தல் வியூக வகுப்பாளரான பிரசாந்த் கிஷோர் பிடிஐ செய்தி நிறுவனத்திற்கு பேட்டி அளித்துள்ளார். அதில் மக்களவை தேர்தல் வெற்றி வாய்ப்பு குறித்து தனது கணிப்புகளை பிடிஐ செய்தி நிறுவனத்துக்கு பிரத்யேக பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது,
நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில், “பாஜகவால் 370 இடங்களை வெல்ல முடியும் என நினைக்கவில்லை, ஆனால் 300 இடங்களை தாண்டுவதற்கு வாய்ப்பு உள்ளது. குறிப்பாக தெலங்கானா, ஒடிசா, மேற்கு வங்கம், தமிழ்நாடு, ஆந்திரா, பீகார் மற்றும் கேரளா ஆகிய மாநிலங்களை நாம் பார்க்க வேண்டும். இங்கு மொத்தம் 204 இடங்கள் உள்ளன.
இநத் மாநிலங்களில், கடந்த 2014 மற்றும் 2019 ஆகிய இரு தேர்தல்களில் இங்கு பாஜகவால் 50 இடங்களை கூட தாண்ட முடியவில்லை. ஆனால், இம்முறை இங்கெல்லாம் பாஜக அதிக இடங்களை வெல்லும். மேற்கு வங்கத்தில் பாஜக முதலிடத்தை பிடிக்கப் போகிறது என்பது நிச்சயம். இது உங்களுக்கு ஆச்சரியம் அளிக்கலாம். ஆனால் அதுதான் உண்மை நிலவரம். அதுபோல, ஒடிசாவிலும் பாஜகவுக்கு முதலிடம் நிச்சயம் கிடைக்க வாய்ப்பு உள்ளது.
அதுபோல, பாஜகவின் பலம் குறைவான கிழக்கு மற்றும் தெற்கு இந்திய மாநிலங்களில் பாஜகவின் வாக்குகள் கணிசமாக உயரும். இந்த ஒரு வருடம் முதன்முறையாக வாக்குப் பங்கீட்டின் அடிப்படையில் தமிழகத்தில் பாஜக இரட்டை இலக்கத்தில் இருப்பதைப் பார்க்கிறேன். அவர்கள் (பாஜக) தெலுங்கானாவில் முதல் அல்லது இரண்டாவது கட்சியாக இருப்பார்கள், அது பெரிய விஷயம். அவர்கள் ஒடிசாவில் நிச்சயம் நம்பர் ஒன் மேற்கு வங்கத்தில் பாஜக முதலிடத்தைப் பிடிக்கும் என நீங்கள் ஆச்சரியப்படுவீர்கள்”
தமிழ்நாடு போன்ற மாநிலங்களில் பாஜக முதல் முறையாக இரட்டை இலக்க சதவீத வாக்குகளை பெறும். இந்த மாநிலங்களில் பிரதமர் மோடி மற்றும் அமித் ஷா போன்றோர் அடிக்கடி பயணம் மேற்கொண்டு கட்சியை பலப்படுத்தியுள்ளனர்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
Thanks: ANI
VIDEO | @ 𝟒 𝐏𝐚𝐫𝐥𝐢𝐚𝐦𝐞𝐧𝐭 𝐒𝐭𝐫𝐞𝐞𝐭: "They (BJP) will significantly add number of seats in eastern and southern India, and we would also see a huge jump in their vote share which is more important in states like Tamil Nadu. I had said this a year back that for the… pic.twitter.com/bWcKRQNtSy
— Press Trust of India (@PTI_News) April 7, 2024
தேர்தலில் திமுக அமோக வெற்றிபெறும் என ஐ-பேக் ரிப்போர்ட்! மகிழ்ச்சியில் ஸ்டாலின்…