க்னோ

த்திரப்பிரதேச துணை முதல்வர் கேசவ் பிரசாத் மவுரியா இன்னும் 50 ஆண்டுகளுக்கு பாஜக உ பி யிலும் மத்தியிலும் ஆட்சி செய்யும் என தெரிவித்துள்ளார்.

நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் பாஜக 302 இடங்களில் வென்று மீண்டும் ஆட்சியை பிடித்துள்ளது.    ஏற்கனவே பல மாநிலங்களில் ஆட்சியை இழந்துள்ள பாஜகவுக்கு இந்த வெற்றி ஒரு உற்சாகத்தை அளித்துள்ளது.   குறிப்பாக உத்திரப் பிரதேசத்தில் ஆளும் கட்சியாக உள்ள பாஜகவினர் இந்த மக்களவை தேர்தலில் 62 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ள போதிலும் முந்தைய மக்களவை தேர்தலில் வென்ற இடங்களை விட இது குறைவாகும்.

லக்னோவில் நடந்த ஒரு பாஜக நிகழ்வில் உத்திரப்பிரதேச மாநில துணை முதல்வர் கேசவ் பிரசாத் மவுரியா, “பாஜக தொண்டர்களுக்கு 2014. 2017 மற்றும் 2019 என பொறுப்பு அதிகரித்துள்ளது.  அதே அளவு பொறுப்புணர்ச்சியுடன் வர உள்ள உத்திரப்பிரதேச மாநில சட்டப்பேரவை இடைத்தேர்தலிலும் அவர்கள் செயல்பட வேண்டும்.  மாநிலத்தின் பல பகுதிகளில் சற்றே குறைகள் இருந்ததால் நமக்கு அனைத்து தொகுதிகளிலும் வெற்றி கிடைக்கவில்லை.

தற்போதைய தேர்தல் முடிவுகளின் மூலம் சமாஜ்வாதி மற்றும் பகுஜன் சமாஜ் கட்சிகள் மக்களிடையே செல்வாக்கு இழந்துள்ளன.  ஒரு சிலர் மருமகனிடம் கோபமும் ஒரு சிலர் அத்தையிடம் கோபமும் கொண்டதால் இந்த அத்தை மருமகன் கூட்டணி தோல்வி அடைந்துள்ளது.   அதை உணராமல் அவர்கள் ஏன் பாஜக மேல் கோபம் கொள்ள வேண்டும்? இந்த கட்சிகளுக்கு அரசியலில் இருந்து விடை கொடுத்து அனுப்ப வேண்டும்.

அமேதியில் தாமரையை மலர வைத்ததன் மூலம் உ. பி மாநிலத்தில் காங்கிரசின் சரித்திரம் முடிந்து விட்டது என மக்கள் அறிவித்துளன்ர். அதையே அகிலேஷ் யாதவ் உள்ளிட்டோருக்கும் மக்கள் தெரிவித்துள்ளனர்.  இந்த வெற்றியின் மூலம் பாஜக இன்னும் 50 வருடங்களுக்கு உத்திரப் பிரதேசத்திலும் மத்தியிலும் ஆட்சி புரியும் என்பதை மக்கள் உணவர வைத்து விட்டனர்” என தெரிவித்தார்.

இந்த 50 ஆட்சி என்னும் ஆரூடம் அனைத்து பாஜக தலைவர்களும் சொல்லி வருவது குறிப்பிடத்தக்கது.   கடந்த 2018 ஆம் வருடம் செப்டம்பர் மாதம் நடந்த கட்சி தலைவர்களின் தேசிய அளவிலான கூட்டம் ஒன்றில் அமித் ஷா, “வரும் 2019  மக்களவை தேர்தலில் பாஜக வெற்றி பெற்றால் நம்மை இன்னும் 50 வருடங்களுக்கு ஆட்சியில் இருந்து அகற்ற முடியாது என தெரிவித்தார்.

சென்ற மாதம் நடந்த ஒரு கூட்டத்தில் பாஜகவின் பொதுச் செயலர் ராம் மாதவ், “இந்திய ஆட்சியில் இருந்து இன்னும் 50 வருடங்களுக்கு பாஜகவை காங்கிரஸ், சமாஜ்வாதி, பகுஜன் சமாஜ் உள்ளிட்ட எந்த கட்சியும் அகற்ற முடியாது” என கூறியது குறிப்பிடத்தக்கது.