ஊழலை மறைக்க முயலும் பாஜக : உண்மையை நம்பும் ராகுல் காந்தி

**நமது ராணுவத்துக்கு 36 ரஃபேல் ரகப் போர் விமானங்கள் வாங்குவதற்கு பிரான்ஸ் நாட்டின் தனியார் நிறுவனத்துடன், கடந்த காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் ஒரு ஒப்பந்தம் போடப்பட்டது!
அதன்படி, ஓரு விமானம் 526 கோடி ரூபாய்க்கு வாங்குவதற்கு ஒப்பந்தம் போடப்பட்ட நிலையில்.. ஆட்சி மாற்றம் ஏற்பட்டு பா. ஜ. க. ஆட்சிக்கு வந்த பின் இதே விமானம் ரூ 1670 கோடிக்குப் புதிதாக ஒப்பந்தம் போடப்பட்டது!
இதில் வெளிப்படையாகவே 40,000 கோடி ரூபாய் ஊழல் நடந்ததாக ஆதாரங்களுடன் பிரான்ஸ் நாட்டுச் செய்தி ஊடகங்கள் அம்பலப் படுத்தின!
ஆனால். இந்த மெகா ஊழலை மறைப்பதற்கு, இன்று காங்கிரஸ் மீது பா. ஜ. க. அவதூறுகளை. அள்ளி வீசுகிறது!
இதை விமர்சிக்கும் வகையில், ” தன் மீதுள்ள ஊழல் கறையை மறைப்பதற்கு நம் மீது பா. ஜ. க. அவதூறுகளை அள்ளி வீசுகிறது… ஆனால், நம்மிடம் உண்மை இருக்கிறது!
எனவே இந்த மோடி அரசை எதிர்த்துப் போராடுவோம்” என்று காங்கிசாரருக்கு ராகுல் காந்தி அழைப்பு விடுத்துள்ளார்.
** ஓவியர் இரா. பாரி.
[youtube-feed feed=1]