சென்னை: பா.ம.க., – பாஜக ., நம்முடன் இல்லாததற்கு கையெடுத்துக் கும்பிட வேண்டும் என்று கூறிய பிரேமலதா விஜயகாந்த், தங்களுடன் கூட்டணி சேராவிட்டால், தேமுதிகவின் வங்கி கணக்கை முடக்குவதாக பாஜக மிரட்டியது என குற்றம் சாட்டி உள்ளார். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மறைந்த நடிகர் விஜயகாந்தின் மனைவி பிரேமலதாவின் அரசியல் பேராசையால், தேமுதிக படு தோல்விகளை சந்தித்த நிலையில், விஜயகாந்தும் பல்வேறு இன்னல்களை சந்தித்து, இறைவனி சேர்ந்து விட்டார். இருந்தாலும், அவரது மறைவு அனுதாபத்தைக்கொண்ட அரசியல் செய்து வரும் பிரேமலதா, பாஜக, அதிமுக, திமுக என மூன்று அணிகளுடன் அரசியல் பேரம் பேசிய நிலையில், திமுக, பாஜகவுடனான பேரம் பணியாத நிலையில், வேறு வழியின்றி அதிமுகவுடன் கூட்டணி அமைத்து நாடாளுமன்ற தேர்தலை எதிர்கொள்கிறார். தனது மகனை விருதுநகர் தொகுதியில் களமிறக்கி உள்ளதுடன், கூட்டணி கட்சிகளுக்கு ஆதரவாக பிரசாரம் மேற்கொண்டு வருகிறார்.
இந்த நிலையில், ஸ்ரீபெரும்புதூர் பாராளுமன்ற தொகுதி,அதிமுக தேமுதிக கூட்டணியில், இரட்டை இலை சின்னத்தில் களமிறங்கும் மருத்துவர் பிரேம்குமாரை ஆதரித்து தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் இரண்டாம் கட்ட பிரச்சாரத்தை தொடங்கினார். அப்போது, பாஜக தலைவர்கள் அவர்களுடன்தான் கூட்டணி வைக்க வேண்டும் என அச்சுறுத்தல் கொடுத்தார்கள். அதுபோல, அதிமுகவுடன் கூட்டணி அமைக்க கூடாது என மிரட்டினார்கள். மீறி மற்ற கட்சிகளுடன் கூட்டணி அமைத்தால், அப்படி தேமுதிகவின் வங்கி கணக்கை முடக்குவதாக பாஜக மிரட்டியது என்று குற்றம் சாட்டியவர், நான் அவர்களுக்கு பயப்படவில்லை, அ.தி.மு.க.,வுடன் கூட்டணி அமைக்கும் முடிவை ஜெயலலிதா போல் உறுதியாக எடுத்தேன் என்றார்.
தொடர்ந்து பேசியவர்,. . பா.ம.க., – பாஜக ., நம்முடன் இல்லாததற்கு கையெடுத்துக் கும்பிட வேண்டும் என்றதுடன்இ, அ.தி.மு.க., கொண்டுவந்த திட்டங்களை தி.மு.க., கொண்டு வந்ததாக சொல்கிறார் உதயநிதி என்று கூறியவர், இன்றைக்கு தமிழகம் முழுவதும் டாஸ்மாக், கஞ்சா விற்பனை அதிகரித்துள்ளதால் தமிழகமே போதையில் தள்ளாடுகிறது. அதேபோல் பாலியல் வன்கொடுமை தமிழகம் முழுவதும் தலைவிரித்தாடுகிறது. மேலும், தமிழகத்தில் படித்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு இல்லை” என ஆளும் திமுகவையும் கடுமையாக சாடினார்.