2021 மார்ச், ஏப்ரல் மாதங்களில் சட்டமன்ற தேர்தலை எதிர்பார்க்கும் மாநிலங்களில் ஒன்று மேற்கு வங்கம். இங்கு திரிணாமுல் காங்கிரசை வீழ்த்த பல்வேறு வியூகங்களை வகுத்து வருகிறார் அமித் ஷா.
திரிணாமுல் காங்கிரசை சேர்ந்த எம்.எல்.ஏ.க்கள் சுவேந்து அதிகாரி தலைமையில் சில நாட்களுக்கு முன் பா.ஜ.க.வுக்கு தாவினர், இதற்கு முன்னதாக முகுல் ராய் இதுபோல் திரிணாமுல் கட்சியில் இருந்து பா.ஜ.க. வந்தார்.
அமித் ஷா வின் இந்த அதிரடி நடவடிக்கைகள் மேற்கு வங்கத்தில் பா.ஜ.க.வின் செல்வாக்கை உயர்த்தும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் நினைத்தது ஒன்னு நடந்தது ஒன்னாக மாறியிருக்கிறது அக்கட்சியின் சமீபத்திய முடிவுகள்.
சுவேந்து அதிகாரி மற்றும் முகுல் ராயின் வரவு பா.ஜ.க.வுக்கு சாதகமாக இருக்கும் என்று எதிர்பார்த்த நிலையில், திரிணாமுல் காங்கிரசில் இருந்தவரை இவர்கள் ஊழல் செய்ததாக குற்றம் சாட்டி வந்த பா.ஜ.க. தற்போது இவர்களின் ஊழலை மறைக்க முயற்சிப்பதாக மக்கள் மத்தியில் விமர்சனம் எழுந்துள்ளது.
இந்த விமர்சனங்களை மறைக்க, இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் நட்சத்திர வீரரும், மேற்கு வங்கத்தில் தனக்கென ரசிகர் பட்டாளத்தை வைத்திருப்பவருமான கங்குலியை அரசியலுக்கு இழுக்கும் முயற்சியில் ஈடுபட்டது பா.ஜ.க.
ஆனால், கங்குலியோ உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார், இது பா.ஜ.க. வின் முயற்சிகளுக்கு பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.
அதோடு, அதானியின் நிறுவன விளம்பரங்களிலும் கங்குலி இருட்டடிப்பு செய்யப்பட்டுள்ளார். இதனால், கங்குலிக்கும் பா.ஜ.க.வுக்கும் இடையே ஏற்பட்ட நெருக்கம் முறிவில் முடிந்துள்ளது.
மேற்கு வங்கத்தில் தி..தி.. மம்தா பானெர்ஜியை வீழ்த்த பல்வேறு வியூகங்களை வகுத்துவரும் அமித் ஷா-வுக்கு கங்குலி விவகாரம் பெரும் பின்னடைவாகவே கருதப்படுகிறது.