குவஹாத்தி: அஸ்ஸாம் மாநிலத்தைப் பொறுத்தவரை, அங்கு ஆளும் பாஜகவுக்கே மீண்டும்  பெரும்பான்மை கிடைக்கும் என்று தேர்லுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்பு முடிவுகள் வெளியாகியுள்ளன.

மொத்தம் 126 உறுப்பினர்கள் கொண்ட அஸ்ஸாம் சட்டசபையில், 64 உறுப்பினர் ஆதரவு இருந்தால் ஆட்சியமைக்கலாம். தற்போது வெளியாகியுள்ள கருத்துக் கணிப்புகளின் அடிப்படையில், பாஜக கூட்டணிக்கு, குறைந்தபட்சம் 59 முதல் அதிகபட்சம் 85 இடங்கள் வரை கிடைக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

காங்கிரஸ் கட்சிக்கு, குறைந்தபட்சம் 40 முதல் அதிகபட்சம் 65 இடங்கள் கிடைக்கும் என்று கூறப்பட்டுள்ளது. அஸ்ஸாம் மாநிலத்தில் சிஏஏ சட்டம் தொடர்பாக நிறைய பிரச்சினைகள் நிலவிய சூழலில், தற்போது அங்கு மீண்டும் பாஜகவே ஆட்சியமைக்கும் என்று கருத்துக் கணிப்புகள் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.