டெல்லி:

டெல்லி சட்டமன்றத்துக்கு பிப்ரவரி 8ந்தேதி தேர்தல் நடைபெற உள்ள நிலையில், 57 வேட்பாளர்கள் கொண்ட முதல் பட்டியலை பா.ஜ.க. வெளியிட்டுள்ளது.

70 தொகுதிகளைக் கொண்ட டெல்லி சட்டமன்றத்திற்கு தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு உள்ளது. அதன்படி பிப்ரவரி 8 தேர்தல் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. கடந்த 14ந்தேதி முதல் வேட்புமனுத் தாக்கல் தொடங்கி உள்ள நிலையில், ஆட்சியை கைப்பற்ற பாரதிய ஜனதா, காங்கிரஸ் கட்சிகளும், ஆட்சியை தக்க வைத்துக்கொள்ள ஆம்ஆத்மி கட்சியும் களத்தில் உள்ளன. அங்கு மும்முனை போட்டிகள் நடைபெற்று வருகின்றன.  கட்சிகள் இடையே கடுமையான போட்டி நிலவி வருகிறது.

இந்த நிலையில், பாஜக 57 வேர்பாளர்கள் கொண்ட முதல் பட்டியலை வெளியிட்டுள்ளது. இதில், மாடல் டவுன் தொகுதியில் கபில் மிஷ்ரா, ரோகிணி தொகுதியில் விஜேந்தர் குப்தா, ஷாலிமார் பாக் தொகுதியில் ரேகா குப்தா, சாந்தினி சவுக் தொகுதியில் சுமன் குமார் குப்தா உள்பட பலரது பெயர்கள் இடம்பெற்றுள்ளன.

இதில் கபில் மிஷ்ரா, ஏற்கனவே ஆம்ஆத்மி கட்சியைச் சேர்ந்த  முன்னாள் எம்.எல்.ஏ. என்பது குறிப்பிடத்தக்கது.