காங்கிரஸ் பிரமுகரான ஜோதிமணி, சமூகவலைதளங்களிலும் தீவிரமாக இயங்கி வருபவர். மத்திய பாஜக அரசின் செயல்பாடுகள் குறித்து தீவிமாக கருத்துக்களைத் தெரிவித்து வருகிறார்.
இந்த நிலையில், பாஜகவை சேர்ந்த சிலர் அட்மினாக இருக்கும் வாட்ஸ் அப் குழுக்களில் ஜோதிமணி குறித்து ஆபாசமாக பதிவிட்டுள்ளனர். மேலும் ஜோதிமணியின் செல் எண்ணையும் பதிவிட்டுள்ளனர்.
இதையடுத்து அவரது போனுக்கு, பாஜக ஆதரவாளர்கள் என்று கூறிக்கொள்ளும் சில், ஆபாசமாக பேசிவருகின்றனர். இதனால் அதிர்ச்சி அடைந்த ஜோதிமணி, இது குறித்து காவல்துறையில் புகார் அளித்துள்ளார்.