டில்லி

இன்று பாஜக தேசியத் தலைவர் ஜே பி நட்டா மற்றும் முன்னாள் குடியரசுத் தலைவ ராம்நாத் கோவிந்த் ஆகியோர் சந்தித்துள்ளனர்.

மத்திய அரசு நாட்டில் ‘ஒரே நாடு, ஒரே தேர்தல்’ தொடர்பாக முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையில் சிறப்புக்குழு ஒன்றை அமைத்து உத்தரவிட்டுள்ளது. இந்த குழு நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல், மாநிலங்களுக்கான சட்டப்பேரவைத் தேர்தலை ஒரே நேரத்தில் நடத்த சாத்தியம் உள்ளதா என்பது குறித்து ஆய்வு செய்து அறிக்கை அளிக்கவுள்ளது.

இன்று பாஜக தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா முன்னாள் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்தை டில்லியில் உள்ள அவரது இல்லத்தில் சந்தித்துப் பேசியுள்ளார்.

இச்சந்திப்பு சில நிமிடங்கள் நடைபெற்றதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.  மத்திய அரசின் ஒரே நாடு, ஒரே தேர்தல் சிறப்பு குழு அறிவிப்பு வெளியான சில மணி நேரத்தில் இந்த சந்திப்பு நடைபெற்றதால் அரசியல் களத்தில் இது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.