டில்லி,

உ.பி.யில் நடைபெற இருக்கும் சட்டமன்ற தேர்தலுக்கு காங்கிரஸ் – சமாஜ்வாதி கூட்டணி கட்சியினரை ஆதரித்து பிரசாரம் செய்ய, அகில இந்திய காங்கிரஸ் தலைவர் சோனியாவின் மகள் பிரியங்கா முடிவு செய்திருக்கிறார்.

இதுகுறித்து பா.ஜ.கவை சேர்ந்த எம்.பி. விநய் கட்டியார், பிரியங்காவை விட அழகான நட்சத்திர பேச்சாளர்கள் காங்கிரசில் நிறைய பேர் உள்ளனர் என கூறினார். அவரது இந்த கருத்து  பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

5 மாநில சட்டசபை தேர்தல்கள் பிப்ரவரி, மார்ச் மாதங்களில் நடைபெற உள்ளது. உத்தரபிர தேசத்தில் 7 கட்டமாக சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது.

இந்த தேர்தலில் தற்போது மாநிலத்தை ஆளும் சமாஜ்வாடி- காங்கிரஸ் கூட்டணி,  பாரதீய ஜனதா, பகுஜன் சமாஜ், ஆகியவற்றுக்கு இடையே மும்முனைப் போட்டி ஏற்பட்டுள்ளது.

இதற்கிடையில் உ.பி.யில் தேர்தல் பிரசாரத்திற்கான நட்சத்திர பேச்சாளர்கள் பட்டியலை காங்கிரஸ் அறிவித்தது. அந்த பட்டியலில் பிரியங்கா பெயரும் இடம்பெற்றிருந்தது.

இதன் காரணமாக.உத்தரபிரதேச மாநிலம் முழுவதும் சட்ட மன்ற தேர்தலில் காங்கிரஸ் மற்றும் சமாஜ்வாதி கூட்டணி வேட்பாளர்களுக்கு  பிரியங்கா பிரசாரம் செய்வார் என்பது உறுதியானது. பிரியங்கா  பிரசாரம் செய்ய முன் வந்திருப்பதால் அம்மாநில காங்கிரஸ் தலைவர்கள், தொண்டர்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

இந்த நிலையில் பிரியங்காவை விட அழகான நட்சத்திர பேச்சாளர்கள் நிறைய பேர் உள்ளனர் என பாரதீய ஜனதா எம்.பி., விநய் கட்டியர் கூறி உள்ள கருத்து பெரும் சர்ச்சையை கிளப்பி உள்ளது.

இந்நிலையில், பாரதீய ஜனதா எம்.பி., விநாயக் கட்டியர் காங்கிரஸ் தலைவர் சோனியாவின் மகள் பிரியங்கா பற்றி கூறி உள்ள கருத்து மற்றொரு சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

இதற்கு காங்கிரஸ் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்து உள்ளனர். விநாயக் கட்டியர் மன்னிப்பு கேட்க வலியுறுத்தி உள்ளனர்.

பிரியங்கா இதுவரை அமேதி, ரேபரேலி ஆகிய இரு தொகுதிகளில் மட்டுமே தேர்த்ல் பணிகளில் ஆர்வம் காட்டிவந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.