பாராபங்கி
பாஜக நாடாளுமன்ற உறுப்பினர் உபேந்திரா தாம் ஆபாச வீடியோ விவகாரத்தில் நிரபராதி என நிரூபிக்கும் வரையில் தேர்தலில் போட்டியிட மாட்டேன் எனத் தெரிவித்துள்ளார்.

விரைவில் நடைபெற உள்ள 2024-ம் ஆண்டு மக்களவை தேர்தலை முன்னிட்டு பாஜக தன்னுடைய 195 பேர் கொண்ட முதல் வேட்பாளர் பட்டியலைக் கடந்த 2-ந்தேதி வெளியிட்டது. இந்த அறிவிப்பை அக்கட்சியின் பொது செயலாளர் வினோத் தாவடே வெளியிட்டார்.
முதல்கட்ட வேட்பாளர் பட்டியலில், 34 மத்திய அமைச்சர்கள் மற்றும் மத்திய இணை அத்தச்சர்களின் பெயர்கள் இடம் பெற்றுள்ளன. மேலும் முன்னாள் முதல்வர்கள் இரண்டு பேர் பட்டியலில் உள்ளனர். நேற்றைய பட்டியலின்படி, உத்தரப் பிரதேசத்தின் பாராபங்கி தொகுதியில் இருந்து பா.ஜ.க. நாடாளுமன்ற உறுப்பினர். உபேந்திரா சிங் ராவத் மீண்டும் போட்டியிடுகிறார் என்னும் அறிவிப்பை பா.ஜ.க. வெளியிட்டது.
ஆனால் சமூக ஊடகத்தில் ராவத்தின் ஆபாச வீடியோ ஒன்று வைரலானதால் இந்த விவகாரத்தில் நிரபராதி என நிரூபிக்கும் வரை, நாடாளுமன்ற உறுப்பினர். தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என்று ராவத் கூறியுள்ளார்.
அவர் எக்ஸ் சமூக ஊடகத்தில்,
“டீப்பேக் ஏ.ஐ. தொழில் நுட்பம் மூலம் ஒரு போலியான வீடியோ உருவாக்கப்பட்டு, வைரலாக்கப்பட்டு வருகிறது. இதுபற்றி நான் எப்.ஐ.ஆர். பதிவு செய்து இருக்கிறேன் எனத் தெரிவித்து உள்ளார். இந்த விசயம் பற்றி விசாரணை நடத்த வேண்டும் என்று கட்சியின் தலைவரிடம் வேண்டுகோளாகக் கேட்டு கொண்டேன் “
என்று பதிவிட்டுள்ளார்.