பாட்னா:
மவுன விரதம் இருப்பதால் வெளிநாட்டு நிறுவன தொடர்பு குறித்து வெளியான செய்திக்கு கருத்து தெரிவிக்க முடியாது என்று பாஜக எம்பி ரவீந்திர கிஷோர் சின்கா தெரிவித்துள்ளார்.
பீகாரை சேர்ந்த பாஜக ராஜ்யசபா எம்பி.யான ரவீந்திர கிஷோர் சின்கா எஸ்ஐஎஸ் என்று செ க்யூரிட்டி சர்வீஸ் நிறுவனத்தை இந்தியாவில் நடத்தி வருகிறார். எஸ்விஎஸ் ஆசியா பசிபிப் ஹே £ல்டிங்ஸ் என்ற நிறுவனம் ஐரோப்பாவில் உள்ள மால்டா நாட்டில் கடந்த 2014ம் ஆண்டில் பதிவு செய்யப்பட்டுள்ளது. இது எஸ்ஐஎஸ் நிறுவனத்தின் சார்பு நிறுவனமாகும்.
இதில் சின்கா சிறு பங்குதாரர். இவரது மனைவி ரீட்டா கிஷோர் இதில் இயக்குனராக உள்ளார். இ ந்த நிறுவனத்துடன் தனக்கும் தனது மனைவிக்கும் உள்ள தொடர்பை கடந்த 2014ம் ஆண்டு ர £ஜ்யசபா தேர்தலுக்கு தாக்கல் செய்த வேட்பு மனுவில் குறிப்பிடவில்லை. ராஜ்யசபா எம்பி ஆன பிறகும் இதை வெளியிடவில்லை.
ஆனால், 2017ம் ஆண்டில் எஸ்ஐஎஸ் நிறுவனத்தின் ஆவணங்களை இந்திய பங்கு சந்தை வ £ரியத்திடம் வழங்கினார். அதில் மால்டா நிறுவனத்தில் உள்ள தொடர்புகள் குறித்து தெரிவி க்கப்பட்டுள்ளது. இந்த தகவல் தற்போது புலனாய்வு செய்தி மூலம் கசிந்துள்ளது.
இது குறித்து கருத்து கேட்க ரவீந்திர கிஷோர் சின்காவை பத்திரிக்கையாளர்கள் அணுகினர். அப்போது, பகவத் யாஜ்னா விழாவை முன்னிட்டு ஒரு வாரத்திற்கு மவுன விரதம் இருப்பதாக சின்கா ஒரு காகிதத்தில் எழுதி காண்பித்து பதில் கூற மறுத்துவிட்டார்.