டெல்லி:  சர்ச்சைக்குரிய பாஜக எம்.பி. மூச்சுத்திணறல் காரணமாக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

2008 ஆம் ஆண்டு மாலேகான் குண்டுவெடிப்பு வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட  சாமியாரினி பிரக்யாசிங் தாக்கூர் சர்ச்சைக்கும் பெயர் பெற்றவர்.  தற்போது 50 வயதாகும் பிரக்யாசிங்  ஆஸ்துமா, உயர் இரத்த அழுத்தம், நீரிழிவு நோய் உள்பட பல்வேறு நோய்களால் பீடிக்கப்பட்டுள்ளார்.  தற்போது போபால்  நாடாளுமன்ற உறுப்பினராக உள்ளார்.

இந்த நிலையில, இன்று  மாலை அவருக்கு திடீரென மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்டதாகவும், மார்பில் வலி, உயர் ரத்த அழுத்தம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. அதையடுத்து, மாலை  4.15 மணியளவில் அவர் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு ஒரு தனியார் வார்டுக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

அவருக்கு  டாக்டர் ரன்தீப் குலேரியா தலைமையினலா குழுவினர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும்,  தற்போது அவரது உடல்நிலை இப்போது சீராக இருப்பதாகவும் கூறப்படுகிறது.

[youtube-feed feed=1]