சில்நகர், உத்தரப்பிரதேசம்

பாஜக மக்களவை உறுப்பினர் சங்கமித்ரா தனது தந்தையும் சமாஜ்வாதி வேட்பாளருமான சுவாமி பிரசாத்துக்கு வாக்கு சேகரித்துள்ளார்.

பகுஜன் சமாஜ் கட்சியின் முக்கிய தலைவர்களில் ஒருவராக சுவாமி பிரசாத் மவுரியா இருந்து வந்தார்.   இவர் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சார்ந்தவர் என்பதால் பகுஜன் சமாஜ கட்சித் தலைவி மாயாவதி இவரை எதிர்க்கட்சி தலைவராக நியமித்து இருந்தார்.  பிறகு அதிருப்தி காரணமாக இவரை மாயாவதி கட்சியில் இருந்து நீக்கியதால் இவர் பாஜகவில் இணைந்தார்.

கடந்த 2017 ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக சார்பில் போட்டியிட்ட சுவாமி பிரசாத் மவுரியா பட்ரோனா தொகுதி உறுப்பினர் ஆனார்.   அதன் பிறகு அவர் 2019 ஆம் வருடம் நடந்த மக்களவை தேர்தலில் தனது மகள் சங்கமித்ரா மலேரியாவை நிறுத்தி வெற்றி பெறச் செய்து மக்களவை உறுப்பினராக்கி உள்ளார்.

சுவாமி பிரசாத் மவுரியா பாஜகவின் இருந்து சமீபத்தில் சமாஜ்வாதி கட்சிக்கு மாறினார். தற்போதைய தேர்தலில் இவர் பசில்நகர் தொகுதியில் சமாஜ்வாதி கட்சி சார்பில் போட்டியிடுகிறார்.   பாஜக சார்பில் இந்த தொகுதியில் சுரேந்திர குஷ்வாகா போட்டியிடுகிறார்.  இவரை ஆதரித்து வாக்கு சேகரிக்க நேற்று சங்கமித்ரா இங்கு வந்திருந்தார்.

அவர் அப்போது தனது தந்தை சுவாமி பிரசாத் மவுரியாவுக்கு சமாஜ்வாதி சின்னமான சைக்கிள் சின்னத்தில் வாக்களிக்க வேண்டும் என வீடு வீடாக ரகசியமாகச் சென்று வாக்கு சேகரித்துள்ளார்.   இதைக் கண்ட உள்ளூர் பாஜகவினர் மற்றும் பத்திரிகையாளர்கள் இது குறித்துக் கேட்டபோது தாம் வாக்கு கேட்கவில்லை என மறுத்துள்ளார்.

இது குறித்து உள்ளூர் பாஜகவினர் மாநில மற்றும் தேசிய தலைமைக்குப்  புகார் அளித்துள்ளனர்.   தந்தையாக இருந்தாலும் பாஜக நாடாளுமன்ற உறுப்பினர் ஒரு சமாஜ்வாதி வேட்பாளருக்கு வாக்கு சேகரித்தது உத்தரப்பிரதேச மாநிலத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.