மகாராஷ்டிரா:
பாஜகவை சேர்ந்த் சட்டமன்ற உறுப்பினர் திரு ராமச்சந்திர அவசாரே சனிக்கிழமையன்று காவல்துறையில் சரணடைந்தார்.
சில நாட்களுக்கு முன் காவல்துறை அதிகாரியுடன் நடந்த வாக்குவாதத்தில், அவரை அவசாரே கன்னத்தில் அறைந்தார்.
இந்த விடியோ இணையதளத்தில் வைரலாக பரவி பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது. சில நாட்களுக்கு முன் அவசாரே தலைமையில் நடைபெற்ற “திரங்க யாத்திரை” ஊர்வலத்தின் போது இச்சம்பவம் நடந்தேறியுள்ளது.
அவ்வூர்வலத்தின் போது சாலை போக்குவரத்துக்கு இடையூராக இருக்கும் என்பதால் , காவல்துறை அதிகாரி ஒருவர் அவசாரேவை தடத்து நிறுத்தியுள்ளார் .இதனால் கோபமடைந்த அவசாரே காவல்துறை அதிகாரியை கன்னத்தில் அறைந்துள்ளார்.
இதே போன்று சில நாட்களுக்கு முன் உதவி ஆட்சியரை தேசியவாத காங். எம்.எல்.ஏ சுரேஷ் அடித்துள்ளார். ஏனினும் அவர் அதுபோல சம்பவம் நடைபெறவில்லை என மறுத்துவிட்டார்.அவர் மேல் புகார் ஏதும் கொடுக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த சில நாட்களாக நாடு முழுவதும் அரசியல்வாதிகள் அதிகாரிகளை தாக்கும் சம்பவம் அதிகரித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது