டில்லி
மத்தியப் பிரதேச பா ஜ க சட்டமன்ற உறுப்பினர் துருவே என்பவர் ஜி எஸ் டி என்பதை ஆடிட்டர்களாலேயே புரிந்துக் கொள்ள முடியவில்லை என கூறி உள்ளார்.
இந்த வருடம் ஜூலை மாதம் முதல் ஜி எஸ் டி அமுலாக்கப்பட்டது. அன்று முதலே அது பற்றி பலருக்கும் சரியான புரிதல் இல்லாமல் இருந்து வருகிறது. இது குறித்து பல எதிர்க்கட்சித் தலைவர்கள் ஏற்கனவே கருத்து தெரிவித்து உள்ளனர். காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தி ”ஜி எஸ் டி என்பது மிகவும் குழப்பத்தை உண்டாக்கி வருகிறது. இதனால் மக்களின் தினசரி வாழ்க்கை பெரிதும் பாதிக்கப் ட்டுள்ளது” என தன் கருத்தைக் கூறி இருந்தார்.
இந்நிலையில் பா ஜ க வை சேர்ந்த மத்தியபிரதேச சட்டமன்ற உறுப்பினர் துருவே, “என்னால் ஜி எஸ் டி பற்றி எதுவும் புரிந்துக் கொள்ள முடியவில்லை. அதனால் நான் அதுபற்றி எதுவும் கருத்துக் கூற முடியவில்லை. ஆடிட்டர்கள், அக்கவுண்டண்டுகள் ஆகியாராலும் கூட இது பற்றி எதுவும் புரிந்துக் கொள்ள முடியாத நிலை உள்ளது. அதனால் தான் தொழிலதிபர்களும், வர்த்தகர்களும் ஏதும் புரியாத நிலையில் உள்ளனர். இந்த ஜி எஸ் டி திட்டம் தெளிவாக புரிய வைக்கப் பட வேண்டும். அதன் பிறகு தான் இந்த திட்டம் வெற்றி அடையும்” எனக் கூறி உள்ளார்.