சென்னை: பாஜக எம்எல்ஏ நயினார் நாகேந்திரன் மகனின் ரூ.100 மதிப்பிலான மோசடி சொத்து பதிவை ரத்து செய்வதாக தமிழ்நாடு அரசு அறிவித்து உள்ளது. ஆனால், மோசடியாக நிலப்பதிவு செய்த நயினார் நாகேந்திரன் மகன் நயினார் பாலாஜி, அவருக்கு உடந்தையாக செயல்பட்டு அரசு பதிவுத்துறை அதிகாரிகள் கைது செய்யப்படாதது சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது

பாஜக எம்எல்ஏ நயினார் நாகேந்திரன் மகன் நயினார் பாலாஜி ரூ.100 மதிப்பிலான சொத்துக்களை மோசடியாக பதிவு செய்து இருப்பதாகவும், இதற்கு பதிவாளர்கள் துணை போனதாகவும், அறப்போர் இயக்கம் குற்றம் சாட்டியது.  பத்திரப்பதிவு துறையில் நில மாபியா, MLA நயினார் நாகேந்திரன் மகன் நயினார் பாலாஜி மற்றும் பத்திரப்பதிவு, வருவாய் துறை அலுவலர்கள் சேர்ந்து சென்னை ஆர்காட் ரோடு கிட்டத்தட்ட ரூ 100 கோடி சொத்தை மோசடி பத்திரப்பதிவு செய்த ஆதாரங்களை அறப்போர் இயக்கம் புகாராக தலைமை செயலர், சென்னை காவல்துறை, பத்திரப்பதிவு துறை அமைச்சர் மற்றும் செயலர் மற்றும் வருவாய் செயலருக்கு அனுப்பி இருந்தது.

இந்த விவகாரத்தில், தமிழ்நாடு அரசு நயினார் பாலாஜி மற்றும் அவருக்கு உதவி செய்த பதிவாளர்களை கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்களும், பொதுமக்கள் வலியுறுத்தி வந்தனர். ஆனால், தமிழ்நாடு அரசு அவர்கள்மீது எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இந்த நிலையில்,  பாஜக எம்எல்ஏ நயினார் நாகேந்திரன் மகன் நயினார் பாலாஜி செய்த ரூ.100 மதிப்பிலான  மோசடி பத்திரப்பதிவு ரத்து ஒப்பந்தத்தை ரத்து செய்து உள்ளதாக  பத்திரப்பதிவுத்துறை அறிவித்து உள்ளது.  மேலும்,   நயினார் பாலாஜி மீதான மோசடி புகார் குறித்து 15 நாட்களில் நடவடிக்கை எடுக்க அமைச்சர் மூர்த்தி உத்தரவிட்டு இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரசையும், ஆட்சியாளர்களை விமர்சனம் செய்யும் சமுக ஊடவியலாளர்களையும், எதிர்க்கட்சிகளையும் உடனே கைது செய்து நடவடிக்கை எடுக்கும் தமிழ்நாடு அரசு மற்றும் காவல்துறை, சுமார் ரூ.100 கோடி சொத்துக்களை மோசடி செய்த மோசடி மன்னர்கள் மீது, அதற்கு உடந்தையாக இருந்த அரசு அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க தயங்குவது பொதுமக்களிடையே சந்தேகங்களை எழுப்பி உள்ளது.

பாஜக எம்எல்ஏ நயினார் நாகேந்திரன் மகன் ரூ.100 கோடி மோசடி நிலப்பதிவு! நடவடிக்கை எப்போது? அறபோர் இயக்கம் குற்றச்சாட்டு….