மதுரை: பிரதமர் மோடி பங்கேற்ற பிரச்சார பொதுக்கூட்டத்தில் பாஜக நிர்வாகி ஒருவர், செய்தியாளர்களை அவமரியாதையாக பேசியதால் பரபரப்பு எழுந்தது.

தமிழகத்தில் சட்டசபை தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், அனைத்து கட்சியினரும் தீவிர பிரச்சாரம் செய்து வருகின்றனர். தமிழகத்தில் அதிமுக, பாஜக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளை ஆதரித்து தொடர்ந்து பிரச்சாரம் செய்து வரும் மோடி, கேரளா, கன்னியாகுமரியிலும் பிரச்சாரம் செய்ய உள்ளார்.
அதனை தொடர்ந்து இன்று மதுரை மாவட்டம் கருப்பாயூரணி பிரச்சார பொதுக்கூட்டத்தில் பங்கேற்க நேற்று தனி விமானம் மூலம் பிரதமர் மோடி மதுரை வந்தடைந்தார். மதுரை வந்த பிரதமர் மோடி, மீனாட்சியம்மன் கோயிலுக்குச் சென்று தரிசனத்தை முடித்துக் கொண்டு, அங்குள்ள பிரபல நட்சத்திர விடுதியில் தங்கினார்.
இந்நிலையில், இன்று பிரதமர் மோடி பங்கேற்ற பிரச்சார பொதுக்கூட்டத்தில் பாஜக நிர்வாகி ஒருவர், செய்தியாளர்களை அவமரியாதையாக பேசியதாக தெரிகிறது. அதற்கு செய்தியாளர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதையடுத்து இரு தரப்புக்கும் இடையே திடீர் மோதலும் ஏற்பட்டது. அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் இரு தரப்பையும் தடுத்து சமாதானப்படுத்திவிட்டனர். இந்த சம்பவத்தால் அங்கு திடீர் சலசலப்பு நிலவியது.
[youtube-feed feed=1]